ரூபாய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ரூபாய் (Rupee) (சுருக்கமாக ரூ.(Re. அல்லது Rs.)) என்பது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், மொரீசியஸ் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு மதிப்புடைய நாணயங்களின் பெயராகும். இந்தோனேசியாவில் பயன்படுத்தப்படும் நாணயம் ருபியா என்றும், மாலத்தீவில் பயன்படுத்தப்படும் நாணயம் ருஃபியா என்றும் அழைக்கப்படுகிறது. நூறு புதிய பைசாக்கள் ஒரு இந்திய ரூபாய்க்கு சமமாகும்.
பொருளடக்கம் |
[தொகு] பெயர்க்காரணம்
'வெள்ளி' எனப் பொருள் தரும் சமஸ்கிருத சொல்லான ருப்யா-விலிரிருந்து ரூபாய் என்ற சொல் பிறந்தது. ( இன்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் "டாலர்" (Dollar) என்ற ஆங்கில நாணயப் பெயருக்கு இணையாக வெள்ளி என்ற தமிழ் சொல்லே பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது ).
1540 முதல் 1545 வரை ஆட்சியில் இருந்த ஷேர் ஷா சூரி (Sher Shah Suri) அறிமுகப்படுத்திய நாணயத்தின் பெயர் ருபியா ஆகும். அந்த வெள்ளி நாணயம் 178 கிராம் எடை உடையதாய் இருந்தது. அன்று முதல், ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலம் வரை அந்த நாணயம் பயன்பாட்டில் இருந்தது. முன்னர், ஒரு ரூபாய் 16 அனாக்களாகவும் ஒரு அனா நான்கு pice அல்லது 12 pie களாகவும் பிரிக்கப்பட்டு இருந்தது. ஒரு ரூபாய்க்கு குறைந்த நாணய மதிப்பை தசமமாக்கும் முறை இலங்கையில் 1869லும், இந்தியாவில் 1957லும் பாகிஸ்தானில் 1961லும் நடைமுறைக்கு வந்தது.
[தொகு] முன்னர் பயன்படுத்தப்பட்ட ரூபாய்கள்
- பர்மிய ரூபாய்
- பிரெஞ்சு இந்திய ரூபாய்
- ஜெர்மன் கிழக்கு ஆப்பிரிக்க ரூபாய்
- வளைகுடா ரூபாய்
- போர்த்துகீசிய இந்திய ரூபாய்
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- இந்திய ரூபாய்
- மொரீசியஸ் ரூபாய்
- நேபாள ரூபாய்
- பாகிஸ்தான் ரூபாய்
- செஷல்ஸ் ரூபாய்
- இலங்கை ரூபாய்
- இந்தோனேசிய ருபியா
- மாலத்தீவு ருஃபியா