வங்காளப் புலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வங்காளப் புலி அல்லது இராயல் பெங்கால் புலி (Panthera tigris tigris) புலியினத்தில் ஒரு சிற்றினம் ஆகும். இப்புலிகள் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், பூடான், மியன்மார் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இவை காடுகள், வெப்பமண்டலப் பகுதிகள் எனப் பல்வேறு வகையான சூழ்நிலைகளில் வாழ்கின்றன. இவற்றின் தோல் பழுப்பு நிறத்தில் கருப்புக்கோடுகளுடன் காணப்படுகிறது. எனினும் வெள்ளைப்புலிகளும் உண்டு.
பொருளடக்கம் |
[தொகு] உடலியற் பண்புகள்
[தொகு] பரம்பல்
2005-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உலகம் முழுதும் தோராயமாக 4,580 வங்கப்புலிகள் உள்ளன.
- இந்தியா: 3,500 - 3,750 + நாட்டின் விலங்குக்காட்சிச் சாலைகளில் உள்ள 332
- வங்காளதேசம்: 300 - 440
- நேபாளம்: 150 - 220
- பூடான்: 50 - 140
- சீனா: 30 - 35
[தொகு] உணவு
வங்கப் புலிகள் ஊனுண்ணிகள் ஆதலால் இவை நடுத்தர மற்றும் பெரிய விலங்குகளான முயல், மான், காட்டெருமை, ஆடு, காட்டுப்பன்றி போன்றவற்றை வேட்டையாடுகின்றன. இவை மரம் ஏறி முதனிகளையும் வேட்டையாடுகின்றன. இவை பொதுவாக இரவிலேயே வேட்டையாடுகின்றன. இப்புலிகள் நன்றாக நீந்த வல்லவை. பொதுவாக இப்புலிகள் வேட்டையாடியதும் இரையை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்று உண்கின்றன. இவற்றால் ஒரே நேரத்தில் 20 கிலோகிராம் வரை உணவு உட்கொள்ள முடியும்.
[தொகு] வாழிடம்
வங்காளப்புலிு தற்பொழுது தீவிரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுவே இந்தியா, வங்காளதேசம் ஆகியவற்றின் நாட்டு விலங்கு ஆகும். இந்தியாவில் புலிகளைக் காக்க கொண்டுவரப்பட்ட ப்ராஜக்ட் டைகர் (Project Tiger) என்னும் திட்டத்தினால் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
[தொகு] அச்சுறுத்தல்கள்
புலிகளின் இயற்கையான வாழிடங்களை அழிப்பதும் வேட்டையாடுதலும் இப்புலிகளின் முக்கிய அச்சுறுத்தல்களாகும். அவற்றின் உடலில் இருந்து பல கிழக்கு ஆசிய நாடுகளில் மருந்துகள் செய்யப்படுகின்றன. எனவே, புலிகளின் தோல் தவிர அவற்றின் உடல்பாகங்களுக்காகவும் அவை வேட்டையாடப் படுகின்றன. புலிகள் மக்கள் வாழும் ஊர்களுக்குள் நுழைந்து அவர்களின் வளர்ப்பு விலங்குகளைக் கொல்வதால் அவை ஊர் மக்களாலும் சிலநேரம் கொல்லப்படுகின்றன.