விழுக்காடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விழுக்காடு (இலங்கை வழக்கு:சதவீதம்) என்பது ஒரு விகிதம் அல்லது பின்னத்தை, முழு எண்ணாக வெளிப்படுத்த ஒரு வழியாகும். 100ஐ பகுவெண்ணாகக் (பின்னக்கீழ் எண்) கொண்டு இவ்வாறு செய்யப்படுகிறது. "45%" என்பது போன்ற ஒரு குறியீடு ("45 விழுக்காடு") 45/100 அல்லது 0.45 என்பதின் சுருக்கமாகும்.
எடுத்துக்காட்டாக,
- "45 விழுக்காடு மனிதர்கள்..."
என்பது பின்வரும் இரண்டு சொற்றொடர்களுக்கும் சமமாகும்:
- "ஒவ்வொரு 100 பேரிலும் உள்ள 45 பேர்..."
- "மனித மக்கட் தொகையில் 0.45 பகுதி "
ஆக "இரண்டு விழுக்காடு" என்பதை,( % சின்னத்தால் குறிக்கப்படுவது), 2/100, அல்லது 0.02 என்ற எண்களாக கருதுவது எளிமையாகும்.
ஒரு விழுக்காடு 100ஐக் காட்டிலும் பெரிய எண்ணாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, 200 % என்பது ஒரு எண்ணை விட இரு மடங்கு கூடுதலான எண்ணை குறிக்கும். 100 விழுக்காட்டு உயர்வு இரு மடங்கு கூடுதலான எண்ணையும், 200 விழுக்காட்டு உயர்வு மூன்று மடங்கு கூடுதலான எண்ணையும் தரும். இதன் மூலம் விழுக்காட்டு உயர்வுக்கும் மடங்கு உயர்வுக்கும் உள்ள தொடர்பை அறியலாம்.
[தொகு] வெளி இணைப்புகள்