வெள்ளை மாளிகை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வெள்ளை மாளிகை (White House) ஐக்கிய அமெரிக்க நாடுகளினது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வதிவிடமும் முதன்மை அலுவலகமும் ஆகும். வெள்ளை மாளிகையானது வெள்ளை வர்ணம் பூசப்பட்ட 1600 பென்சில்சேனியா அவெனியூ வாசிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள நியோகிளாசிக்கல் கட்டடக்கலை முறையிலமைந்த ஒரு மணற்கல் மாளிகையாகும் ( ).
அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகமாக இது இருப்பதனால் அமெரிக்க ஜனாதிபதியின் அரசியல் நிர்வாகத்தைக் குறிக்க வெள்ளை மாளிகை என்னும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை மாளிகை தேசிய பூங்கா சேவைக்கு (National Park Service) சொந்தமாக உள்ளது. 20 டொலர் அமெரிக்கப் பணத்தாளின் பின்புறத்தில் வெள்ளை மாளிகைளின் படம் பதிக்கப்பட்டுள்ளது.