பயனர் பேச்சு:Viruba
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வாருங்கள், Viruba!
விக்கிபீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிபீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--கோபி 17:51, 21 ஜூன் 2006 (UTC)
- வணக்கம் விருபா, உங்கள் வருகை தமிழ் விக்கிப்பீடியாவை மேலும் சிறக்க வைக்கும். உங்கள் பங்களிப்புகளை தொடர்ந்து தாருங்கள். குறிப்பாக தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளைத் தாருங்கள்.--Kanags 01:29, 15 ஜூலை 2006 (UTC)
- வணக்கம் Kanags, நான் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு புதியவன், சில பயிற்சிகள் இன்னமும் தேவையாகவுள்ளது.சிறிது சிறிதாக எனது பங்களிப்புக்களைத் தொடர்கிறேன்.--விருபா 01:35, 15 ஜூலை 2006 (UTC)
- வணக்கம் Kanags, எனக்கு தலையங்கத்தில் "வே.தில்லைநாயகம்" என்பதற்கு "வே.தில்லநாயகம்" என்று தவறாக இட்டுவிட்டேன், தவிர அதை மாற்றவும் தெரியவில்லை. நீங்கள் நல்ல நிலையில் மாற்றி தந்துள்ளீர்கள், நன்றி --விருபா 10:34, 17 ஜூலை 2006 (UTC)
[தொகு] வலைப்பதிவு
உங்கள் வலைப்பதிவையும் இணையத்தளத்தையும் பார்த்தேன். தமிழில் நல்ல முயற்சி. பாராட்டுக்கள். இது தொடர்பான பங்களிப்புகளை விக்கிபீடியாவிலும் தொடர்ந்து செய்ய வேண்டுகிறேன். நன்றி--ரவி 09:28, 17 செப்டெம்பர் 2006 (UTC)
இணையத்தளம் பார்த்தேன் நல்லமுயற்சி. இது மேலும் வளர்ந்து பயன் தர எனது வாழ்த்துக்கள். Mayooranathan 13:06, 17 செப்டெம்பர் 2006 (UTC)
ரவி, Mayooranathan இருவருக்கும் நன்றி, எனக்கு இன்னமும் விக்கிப்பீடியா முற்றிலுமாக பிடிபடவில்லை, சிறிது சிறிதாக எனது பங்களிப்புக்களைத் தொடர்கிறேன்--விருபா 17:43, 17 செப்டெம்பர் 2006 (UTC)
[தொகு] கோவூர்
ஆபிரகாம் டி.கோவூர் பற்றிய கட்டுரை ஆபிரகாம் கோவூர்க்கு மாற்றியுள்ளேன். அந்தத் தலைப்பே பொருத்தமாக இருக்கும். ஆட்சேபனை இராது என நினைக்கிறேன்:). பகுத்தறிவாளர் தந்தை பெரியார் நினைவு மாதத்தில் கோவுரும் நினைவு கூறப்படவேண்டியவர். கட்டுரைக்கு நன்றி.--Kanags 12:21, 18 செப்டெம்பர் 2006 (UTC)
[தொகு] தகவல் தேவை
விருபா, பின்வரும் தகவல்கள் தேவை. உங்களால் முடிந்தளவு எடுத்துத் தாருங்கள்.
- பொன்னம்பலம் இராமநாதன் இறந்த தேதி (நவம்பர் 26 அல்லது நவம்பர் 30??
- ஓவியர் ரவி வர்மா இறந்த தேதி (அக்டோபர் 2 அல்லது அக்டோபர் 6??
- சி. சிவஞானசுந்தரம் அல்லது சிரித்திரன் சுந்தர் - கட்டுரை (குறிப்பாக வாழ்க்கைச் சுருக்கம்
- சோமசுந்தரப் புலவர் - வாழ்க்கைச் சுருக்கம்
நன்றி.--Kanags 02:01, 26 நவம்பர் 2006 (UTC)