இசைக்கருவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இசைக்கருவி என்பது இசையொலியின் (நாதம்) பல நுட்பங்களைத் தெரிந்து கொள்வதற்கும், இசையறிவில் வளர்ந்து இசையின் அழகைத் துய்ப்பதற்கும், சிறப்பாக மொழிகலவாத் தனியிசையின் (absolute music) மேன்மையை உணர்வதற்கும் பெரிதும் பயன்படுகின்றது.
[தொகு] இசைக்கருவிகளின் வகைகள்
- நரம்புக் கருவிகள் (தந்தி வாத்தியங்கள் - chordophones). யாழ், தம்புரா, வீணை, வயலின், கோட்டு வாத்தியம் ஆகியன நரம்புக் கருவிகள்.
- துளைக் கருவிகள் (காற்று வாத்தியங்கள் - aerophones). புல்லாங்குழல், நாதசுவரம், கிளாரினெட் முதலியவை துளைக்கருவிகள்.
- தோற்கருவிகள் (அவனத அல்லது கொட்டு வாத்தியங்கள் - membranophones). தவில், மிருதங்கம், கஞ்சிரா முதலியவை தோற்கருவிகள்.
- கன கருவிகள் (கஞ்சக் கருவிகள் (idiophones அல்லது autophones). ஜால்ரா, குழித்தாளம், ஜலதரங்கம் முதலியவை கனகருவிகள்.
[தொகு] அரங்கிசையில் வாசிக்கப்படும் முக்கிய கருவிகள்
- வீணை
- கோட்டு வாத்தியம்
- புல்லாங்குழல்
- நாதசுவரம்
- வயலின்
[தொகு] அரங்கிசையில் வாசிக்கப்படும் துணைக்கருவிகள்
- வயலின்
- மிருதங்கம்
- தவில்
- கஞ்சிரா