இந்தியப் பிரதமர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்தியப் பிரதமர்: இந்திய அரசாங்கத்தின் மிக உயர்ந்த, அதிக அதிகாரங்கள் உள்ள பதவியாகும். இவரே மத்திய அமைச்சரவையின் தலைவராவார். இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களால் இந்தியப் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார், தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆவார்[1]. பிரதமர் பாராளுமன்றத்தின் மக்களவையின் உறுப்பினராக இருத்தல் வேண்டும் அல்லது பிரதமராக பதவி ஏற்ற நாளில் இருந்து ஆறு மாதத்திற்க்குள் மக்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
பொருளடக்கம் |
[தொகு] பிரதமர் நியமனம்
பிரதமர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். பாராளுமன்றத்தின் மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரை மட்டுமே குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க அழைப்பார். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லையென்றால் கூட்டணிக்கட்சித் தலைவரையோ அல்லது அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவரையோ அழைப்பார்[2].
[தொகு] அதிகாரங்கள் மற்றும் பணிகள்[3]
- பிரதமர் அமைச்சரவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வார், குடியரசுத் தலைவர் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.
- பிரதமர் அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்குவார்.
- அனைத்து அமைச்சர்களின் துறைகளை ஒருங்கினைப்பது, அமைச்சர்களின் துறைகளுக்கிடையேயான பிரச்சனைகளைக் களைவது பிரதமரின் பணியாகும்.
- அரசின் கொள்கைகளை பிரதமரே முடிவு செய்வார்.
- பிரதமர் இந்திய திட்டக்குழுவின் தலைவராவார்.
- பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் உயர் மற்றும் உச்ச நீதிமன்றத் நீதிபதிகள், தேர்தல் ஆணையர், பொது தணிக்கை அதிகாரி ஆகியோர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
- முக்கிய இராணுவ விடயங்கள்.
- பொதுப்பணிகள் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தங்கள் பற்றிய கொள்கை முடிவுகள்.
- மாநிலங்களுக்கான சிறப்பு நிதிகளை வழங்கல் மற்றும் கண்காணித்தல்.
- முக்கிய பிரச்சினைகளுக்கு பாராளுமன்றதில் பதிலளித்தல்.
- பிரதமரின் தேசிய நிவரண நிதி மற்றும் தேசிய இராணுவ நிதி போன்றவற்றை நிர்வகித்தல்.
[தொகு] பிரதமர் அலுவலகம்
பிரதமர் அலுவலக முகவரி:
- சவுத் பிளக், ராய்சினா ஹில்,
- புது டில்லி, இந்தியா - 110 011,
- தொலைபேசி: 91-11-23012312.
இந்தியாவின் இரு முக்கிய செயலகங்களில் சவுத் பிளாக்கும் ஒன்று, மற்றொன்று நார்த் பிளாக். பிரதமர் அலுவலகம், பிரதமருக்கு செயலாக்க உதவிகளைப் புரியும். பிரதமரின் முதன்மைச் செயலாளரின் தலைமையில் இயங்கும். இது ஊழல் தடுப்பு மற்றும் பொது மக்கள் குறைத்தீர்ப்பு பொன்ற பிரிவுகளை உள்ளடக்கியது[3].
[தொகு] பிரதமரின் தேசிய நிவாரண நிதி
1948 ல், பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கு உதவுவதற்க்காக அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமக்களின் பங்களிப்புடன் உருவாக்கப் பட்டது தான் பிரதமரின் தேசிய நிவாரண நிதி. தற்போது இந்நிதி வெள்ளம், பூகம்பம் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை அழிவுகளினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணத்திற்காக வழங்கப்படுகிறது. பெரும் கலவரங்கள் அல்லது பெரும் விபத்து போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்க்கும் இந்நிதி வழங்கப்படுகிறது. இதய அறுவைசிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, புற்று நோய் போன்ற மருத்துவ சிகிச்சைகளுக்கும் இந் நிதி பயன்படுகிறது. பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் இந்நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிதி முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இந்நிதி பொதுத்துறை வங்கிகளில் இருப்புக் கணக்கில் முதலீடு செய்யப்படுகிறது[4].
[தொகு] பிரதமரின் தேசிய இராணுவ நிதி
இந்திய இராணுவப் படையினர், துணை இராணுவப் படையினர் மற்றும் அவர்களின் உறவினர்கள் நலனுக்காக பிரதமரின் தேசிய இரானுவ நிதி உருவக்கப்பட்டது. இந்நிதி, பிரதமரைத் தலைவராகவும், பாதுகாப்பு, நிதி மற்றும் உள்த்துறை அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டும் உள்ள செயற்குழுவினால் நிர்வகிக்கப்படுகிறது. நிதி அமைச்சரே இந்நிதியின் பொருளாளரும், இணைச் செயலாளரும் ஆவார்.
இந்நிதி, இந்திய ரிசர்வ் வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது[4].
[தொகு] இந்தியப் பிரதமர்களின் பட்டியல்[5]
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] மேற்கோள்களும் அடிக்குறிகளும்
- ↑ இந்தியப் பிரதமர் [1]
- ↑ இந்திய அரசியலமைப்புச் சட்டம் [2]
- ↑ 3.0 3.1 அதிகாரங்கள் மற்றும் பணிகள் [3]
- ↑ 4.0 4.1 பிரதமரின் தேசிய நிவாரண நிதி [4]
- ↑ இந்தியப் பிரதமர்கள் [5]