கருங்குழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கருங்குழிகள் (Black Hole) பாரிய நட்சத்திரங்களின் பரிணாமத்தின் இறுதிக்கட்டமாகக் கருதப்படுகிறது. ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடுகளின் அடிப்படையிலான கணிப்புகளின்படி கருங்குழிகள் இருப்பது பற்றி எதிர்வு கூறப்பட்டது எனினும், பரிசோதனை அடிப்படையிலான சான்றுகள் அண்மையிலேயே கிடைக்கத் தொடங்கியுள்ளன. ஐன்ஸ்டீனின் கோட்பாடுகள் எதிர்வு கூறுகின்றபடி, இது அண்டவெளியில் ஒரு புள்ளி மட்டுமே. இதற்குக் கன அளவோ, மேற்பரப்போ கிடையாது. ஆனால் இதன் பிரம்மாண்டமான திணிவு (mass) காரணமாக இது முடிவிலியான அடர்த்தியைக் கொண்டுள்ளது.