கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலியஸ் சீசர் (ஜூலை 12 அல்லது ஜூலை 13, கி. மு. 100 - மார்ச் 15, கி. மு. 44) ரோமானிய இராணுவ மற்றும் அரசியற் தலைவர். உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் ஒருவராவார். ரோம் நாட்டை ரோமானியப் பேரரசாக மாற்றியமைத்ததில் மிக முக்கிய பங்காற்றியவராவார்.