பெளத்தம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெளத்தம் கி.மு.566-கி.மு.486 ல் வாழ்ந்த புத்தரின் போதனைகளின் அடிப்படையிலான ஒரு சமயமும், தத்துவமுமாகும். இந்தியாவில் தோன்றிய இம்மதம் பின்னர் படிப்படியாக மத்திய ஆசியா, இலங்கை, திபெத், தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்காசிய நாடுகளாகிய சீனா, வியட்நாம், ஜப்பான், கொரியா, மங்கோலியா ஆகிய நாடுகளுக்கும் பரவியது.
"எல்லாத் தீமைகளையும் கைவிடுதல். நன்மையே செய்தல் ஒருவரின் உள்ளத்தைத் தூய்மையாக்கல் என்பனவே புத்தரின் போதனைகளாகும்." (தம்மபதம், XIV, 5)
பௌத்தம் பெரும்பாலும், நற்செய்கைகளைச் செய்தல், கெட்ட செய்கைகளை விலக்குதல், மனப்பயிற்சி என்பவற்றைக் கொண்டுள்ளது. இச் செயல்களின் நோக்கம், தனியொருவரினதோ அல்லது சகல உயிரினங்களினதுமோ கஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்து ஞானம் பெறுவதாகும். ஞானம் பெறுவதென்பது நிர்வாணம் அடைதலாகும்.
[தொகு] உலகின் தோற்றம் பற்றி பெளத்தம்
உலகின் தோற்றம் பற்றி பல சமயங்களில் உறிதியுடன் தகவல்கள்கள் தரப்பட்டுள்ளன. பொதுவாக, பிற சமயங்கள் உலகை தேற்றுவித்த ஒன்றை பற்றி குறிப்பிட்டு சொல்கின்றன. பெளத்தம் இக்கேள்வி தேவையற்ற ஒன்றாக கருதி, விடையை நோக்கி கற்பனை கதைகளை தர மறுக்கின்றது. உலகம் இருக்கின்றது, அதுவே பெளத்ததின் முடிவு. தேவையேற்படின், இவ்வுலகம் முந்தி இருந்த உலகத்தில் இருந்து கர்ம விதிகளுக்கமைய வந்தது என கொள்ளலாம். எப்படி ஒரு மரம் விதையில் இருந்து வந்ததோ, எப்படி விதை மரத்தில் இருந்து வந்ததோ அப்படியே. [1]
[தொகு] சார்பிற்றோற்றக் கொள்கை
கடவுள் அல்லது ஒரு ஒருமிய சக்தி உலகை தோற்றுவிக்கிவில்லை என்பது பெளத்தத்தில், புத்தர் போதனைகளில் முக்கிய ஒரு கொள்கை. இக்கொள்கையை தமிழில் சார்பிற்றோற்றக் கொள்கை என்றும் சமஸ்கிரதத்தில் பிரதித்தியசமுப்பாதம் என்றும் ஆங்கிலத்தில் Dependent Origination என்பர்.
இக்கொள்கையை சோ.ந.கந்தசாமி பின்வருமாறு விளக்குகின்றார்:
"எப்பொருளும் தோன்றச் சார்புகள் (=நிதானங்கள்) காரணமாக உள்ளன. ஆதலின், ஒருபொருளை உண்டென்றோ இல்லையென்றோ உரைப்பது பிழை. எப்பொருளும் சார்பினால் தோன்றி மறைந்து தோன்றி மறைந்து தொடர்தலின் நிலைபேறான தன்மை இல்லை. தோன்றி மறைதல் என்பது இடையறவு படாமல் விளக்குச்சுடர் போலவும் ஓடும் நீர்போலவும் நிகழ்தலின் தோன்றுதல் மறைதல் என்ற இரண்டிற்கும் இடையே நிறுத்தம் என்பது இல்லை. ஆதலின், புத்தரின் சார்பிற்றோற்றக் கொள்கை, முதற் காரணத்தை உடன்பட்ட கடவுட் கொள்கையினைப் புறக்கணித்து, ஒன்று தோன்ற ஒன்று சார்பாக உள்ளது என்ற சார்புக் காரணத்தை கொண்டது." [2]
[தொகு] உலகின் மூன்று அம்சங்கள்
பெளத்தின் நோக்கில் உலகு மூன்று அடிப்படை அம்சங்களினால் ஆனது, அவை: [3]
- Matter - physical objects
- Mind - subjective experiences
- Abstract composites - mental formations
[தொகு] கடவுள் கோட்பாடு
See Also: en:God in Buddhism
பெளத்த உலக பார்வையில் கடவுள் இருப்பதை அனுமானிக்கவில்லை, அப்படி இருந்தாலும் அதற்கான தேவை அங்கு இல்லை. கர்ம விதிகளுக்கு அமையவே உலகம் இயங்குகின்றது, அதை மீறிய மீவியிற்கை ஒன்றிருப்பதை பெளத்தம் மறுக்கின்றது. அப்படி இருந்தால் எந்த ஒரு பொருளுகும்மான இருப்பை நோக்கிய பெளத்தத்தின் அடிப்படை மூன்று விதிகளான Anicca, Anatta, Dukkha மீறியே கடவுள் என்ற ஒன்று இருக்க வேண்டும், அது பெளத்தத்தின் உலக பார்வைக்கு ஒவ்வாது.
அனைத்தையும் உருவாக்கும், நிர்வாகிக்கும், அழிக்கும் குணங்களை கொண்ட ஒருமிய சக்தி போன்ற கடவுள் என்ற ஒன்று உண்டு என்பதை புத்தர் மறுத்தார். எனினும் பெளத்தத்தில் தேவர்கள் என்ற ஒரு வகை பிறவிகள் இருக்கின்றார்கள். அவர்களால் ஒரு உயர்ந்த நிலையில் அல்லது வேறு பரிணாமத்தில் கர்ம விதிகளை புரிய கூடியவர்கள் அல்லது அனுபவங்களை பெற அல்லது அனுபவிக்க கூடியவர்கள், ஆனால் அவர்கள் கர்ம விதிகளுக்கு கட்டுபட்டவர்களே.
புத்தர் கடவுள் இல்லை. அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர். பெளத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை, மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள்.
மேலதிக தகவல்களுக்கு குறிப்புகளை நோக்குக: [4]
[தொகு] Freethinking in Buddhism
Free thought was advocated by Buddha in the Buddhist text the Kalama Sutta. The following excerpt encourages freethought:
- "It is proper for you, Kalamas [the people of Kesaputta], to doubt, to be uncertain; uncertainty has arisen in you about what is doubtful. Come, Kalamas. Do not go upon what has been acquired by repeated hearing; nor upon tradition; nor upon rumor; nor upon what is in a scripture; nor upon surmise; nor upon an axiom; nor upon specious reasoning; nor upon a bias towards a notion that has been pondered over; nor upon another's seeming ability; nor upon the consideration, 'The monk is our teacher.' Kalamas, when you yourselves know: 'These things are bad; these things are blameable; these things are censured by the wise; undertaken and observed, these things lead to harm and ill, abandon them."
[தொகு] புத்தர் கண்ட நான்கு உண்மைகள்
- துக்கம்: மனிதர்களால் துக்கத்தை தவிர்க்க முடியாது. பிறப்பு, நோய், முதுமை, இறப்பு ஆகியவை மனிதருக்கு துக்கத்தை தருபவை. பசி, பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவையும் துக்கம் தருபவையே.
- ஆசை/பற்று: துக்கத்துக்கான காரணம் ஆசை அல்லது பற்று.
- துக்க நிவாரணம்: ஆசையை விட்டுவிடுவதுவே துக்கதுக்கான நிவாரணம்.
- எட்டு நெறிகள்: எட்டு நெறிகளும் துக்கத்தை போக்க உதவும் வழிமுறைகள் ஆகும்.
[தொகு] எட்டு நெறிமுறைகள்
- நற்காட்சி - Right View
- நல்லெண்ணம் - Right Thought
- நல்வாய்மை - Right Speech
- நற்செய்கை - Right Conduct
- நல்வாழ்க்கை - Right Livelihood
- நன்முயற்சி - Right Effort
- நற்கடைப்பிடி - Right Mindfulness
- நற்தியானம் - Right Meditation
[தொகு] பிறவிச் சுழற்சியின் பன்னிரு சார்பு நிலைகள்
தமிழ் | ஆங்கிலம் | சமஸ்கிரதம் | பாலி | விளக்கம் |
---|---|---|---|---|
பேதைமை | Ignorance | அவித்தை | அவிஜ்ஜா | |
செய்கை | Impressions | சங்காரம் | சம்ஸ்காரம் | |
உணர்வு | Consciousness | விஞ்ஞானக் கந்தம் | விஞ்ஞானக் கந்தம் | |
அருவுரு | Mind-Body Organism | நாமரூபம் | நாமரூபம் | |
ஆறு வாயில்கள் | Six Senses | ஷட் ஆயத்தனம் | ஷள் ஆயத்தனம் | |
ஊறு | Sense contact | ஸ்பர்சம் | பஸ்ஸோ | |
நுகர்ச்சி | Sense Experience | வேதனா | வேதனா | |
வேட்கை | Craving | திருஷ்ணா | தண்ஹ | |
பற்று | Mental Clinging | உபாதானம் | உபாதானம் | |
பவம் | Will to born | பகவ | பகவ | |
பிறப்பு | Rebirth | ஜாதி | ஜாதி | |
வினைப்பயன் | Suffering | ஜராமரணம் | ஜராமரணம் |
[தொகு] பெளத்த எண்ணக்கருக்கள்
- அகிம்சை
- கர்மம்
- சம்சாரம்
- ஆத்மன்
- தர்மம்
- நிர்வானம்
- புத்தம்
- மீள்பிறவி
[தொகு] தமிழில் பெளத்தம் நோக்கிய ஆக்கங்கள்
- மணிமேகலை: பெளத்த பிரபஞ்சவியல், தருகவியல், தத்துவவியல்
- சிலப்பதிகாரம்
- குண்டலகேசி
[தொகு] Buddhism in the modern world
- Buddhism has the characteristics of what would be expected in a cosmic religion for the future: It transcends a personal God, avoids dogmas and theology; it covers both the natural and the spiritual, and it is based on a religious sense aspiring from the experience of all things, natural and spiritual, as a meaningful unity.
- — Albert Einstein
Estimates of the number of Buddhists vary between 230 million and 500 million, with 350 million being the most commonly cited figure. [1]
- Mahāyāna remains the most common form of Buddhism in China, Japan, Korea, Vietnam, and Singapore. Chinese immigrants to Southeast Asia have brought Mahayana Buddhism into Malaysia, Indonesia, and Brunei.
- Theravāda predominates in most of Southeast Asia, including Burma, Cambodia, Laos, Thailand, and Sri Lanka. It also has seats of recognition in Malaysia and Singapore.
- Vajrayāna is predominant in Tibet, Mongolia, portions of Russia and Siberia, and portions of India, especially those areas bordering Tibet. Kalmykia, while geographically located in Europe, is culturally closely related to Mongolia and thus its Buddhism is more properly grouped with Asian than with Western Buddhism.
While in the West, Buddhism is often seen as exotic and progressive; in the East, Buddhism is regarded as familiar and part of the establishment. Buddhist organizations in Asia frequently are well-funded and enjoy support from the wealthy and influential. In some cases, this has led critics to charge that certain monks and organizations are too closely associated with the powerful and are neglecting their duties to the poor.
[தொகு] பெளத்தமும் அறிவியலும்
பிற சமயங்கள் போலன்று பெளத்தம் அறிவியலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள தயங்குவதில்லை. ரிபற்ரன் தலாய் லாமாவின் பின்வரும் கூற்று இதை தெளிவுறுத்துகின்றது. "பொளத்ததில் மெய்ப்பொருள் புரிதலை நோக்கிய தேடல் சீரிய ஆராய்ச்சியனால் (critical investigation) மேற்கொள்ளப்படுகின்றது. அறிவியல் முடிவாக பெளத்தத்தின் கூற்றுக்கள் எதாவதை பிழை என்று நிரூபிக்குமானால், அறிவியலை ஏற்று அந்தக் கூற்றுக்களை பெளத்ததில் இருந்து விலக்கிவிடவேண்டும்."[5]
ஆனால், தற்கால அறிவியலின் வழிமுறைகளில் எல்லைகள் உண்டென்றும், மெய்ப்பொருளை அறிவதில் அறிவியலுக்கு உட்படாத வழிமுறைகளும் தேவை என்றும் பெளத்தம் கருதுகின்றது. அதாவது, சிலர் அனைத்தையும் அறிவியலால் அல்லது அறிவியலுக்கு உட்பட்டது என்கின்றார்கள். இக்கருத்தை பெளத்தம் ஏற்கவில்லை, மேலும் இக்கருத்து அறிவில் தன்மையற்றது என்பதையும் சுட்டுகின்றது. தலாய் லாமா இவ்விடயம் நோக்கி பின்வருமாறு கூறுகின்றார்: There is a view where "psychology can be reduced to biology, biology to chemistry, and chemistry to physics. My concern here is not so much to argue against this reductionist position (although I myself do not share it) but to draw attention to a vitally important point: that these ideas do not constitue scientific knowledge; rather they represent a philosophical, in fact a metaphysical, position." [6]
[தொகு] பெளத்தமும் தலித் மக்களும்
இந்து சமய சாதிய சமூக கட்டமைப்புக்குள் இருந்து விடுபட பெளத்தம் ஒரு மாற்று வழியாக தலித் மக்களின் முக்கிய தலைவர்களின் ஒருவரான அம்போத்கரினால் பரிந்துரைக்கப்பட்டது. இப்பரிந்துரை அரசியல் சமூக காரணங்களுக்கான ஒரு மேலோட்டமனான பரிந்துரை அல்ல. அம்போக்கர் இளவயதில் இருந்தே பெளத்தை ஆய்ந்து, அதன் மீது நம்பிக்கை கொண்டு முன்மொழியப்பட்ட ஒரு பரிந்துரையே. தலித்துக்கள் மன ரீதியா தம்மை விடுதலை செய்ய சமய மாற்றம் அவசியம் என்பதை அம்போத்கர் உணர்ந்து விளக்கினார். அவரின் வழிநடத்தலில் பலர் இந்து சமயத்தை துறந்து பெளத்தத்தை ஏற்றனர். இன்றும் அவ்வப்பொழுது பல தலித் சமூக மக்கள் தனியாகவோ, குழுவாகவோ பெளத்தத்தை ஏற்பது தொடர்கின்றது. [7]
[தொகு] பெளத்த சமயத்தின் குறைபாடுகள்
- கௌதம புத்தர் ஒரு மனிதரே. அவர் தன்னை கடவுளாக கருதவுமில்லை அப்படி போதிக்கவுமில்லை. இருப்பினும் பல பெளத்தர்கள் அவரை ஒரு கடவுளாகவே கருதி வழிபடுகின்றனர். இது பெளத்த சமயத்தின் நடைமுறைக்கும் அதன் அடிப்படைக் கொள்கைக்கும் இருக்கும் ஒரு முக்கிய முரண்பாடு.
- பெளத்த சமயம் அகிம்சையை போதிக்கின்றது. ஆனால் இலங்கையில் பல பிக்குகள் போரை ஆதரித்துள்ளார்கள். இந்த முரண்பாட்டை பெளத்த சமயம் எதிர்கொள்ளாதது அதன் ஒரு குறைபாடாகும்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "The problem of the origin of the world is decisive in many religions, and is mostly approached by assuming an original creator of all that is. This, however, is inconceivable for many Asians, who consider it but idle speculation on the ground that it seems dubious whether the causal law is applicable to the world; and further that if God created the world, then the obvious question arises as to what is the cause of God. Buddhism regards this question of a first cause as futile and refuses to speculate about it. For practical purposes the statement suffices that the present world has come into being by reason of the karmic consequences of a previous world - just as a tree grows from a seed, but the seed came from a previously existing gree." (Buddhism: a non-theistic religion by Helmuth vo Glasenapd)
- ↑ (பக்கம் 269) - சோ.ந.கந்தசாமி. (2004). இந்திய தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம்.
- ↑ Dalai Lama. (2005). The Universe in a Single Atom: The convergence of science and spirituality. New York: Morgan Road Books. பக்கம் 125.
- ↑ "A fundamental Buddhist belief is that all phenomena without exemption (including all animate beings) have three essential characteristics. These are dukkha (explained above), anicca (impermanence), and anattá (insubstantiality, "no-soul"). The attributes of God are not consistent with these universal marks of existence. Thus God must be free from dukkha; he must be eternal (and hence not subject to anicca); finally he must have a distinct unchanging identity (and therefore lack the characteristic of anattá)."
"Another concomitant of the God-idea that is fundamentally incompatible with Buddhism is the belief that God acts as the final judge and could determine if individuals go to heaven or hell. According to Buddhism the destination of individuals is determined by the karmic law, which cannot be interfered by any external process. Only individuals can effect their karmic destinies; even a Buddha cannot "pardon" or otherwise interfere with the karmic process. In Buddhism there is simply no place for a God even if one were to exist." (http://www.buddhistinformation.com/buddhist_attitude_to_god.htm)
"The idea of God the rewarder or punisher is replaced by the law of nature. It is impersonal, it has no bias and makes deals with no one. There are no favorites, the Law is very neutral and very fair. All people who develop goodness, regardless of their religion, go to heaven through the power of that goodness. When that power of goodness fades away they die and are reborn somewhere else. Goodness and evil have their own rewards according to the laws of nature. These laws are fundamental, they are the basis of nature." (http://www.saigon.com/~anson/ebud/ebdha268.htm)
- ↑ Dalai Lama. (2005). The Universe in a Single Atom: The convergence of science and spirituality. New York: Morgan Road Books.
- ↑ Dalai Lama. (2005). The Universe in a Single Atom: The convergence of science and spirituality. New York: Morgan Road Books. பக்கம் 12.
- ↑
- சி.என். குமாரசாமி. (2001). அம்போத்கரும் தலித் மனித உரிமைப் போராட்டமும். சென்னை: தமிழ் புத்தகாலயம்.
- சி.என். குமாரசாமி. (2001). அம்போத்கரும் தலித் மனித உரிமைப் போராட்டமும். சென்னை: தமிழ் புத்தகாலயம்.
[தொகு] ஆதாரங்கள்
- சோ.ந.கந்தசாமி. (2004). இந்திய தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம்.
- சி.என். குமாரசாமி. (2001). அம்போத்கரும் தலித் மனித உரிமைப் போராட்டமும். சென்னை: தமிழ் புத்தகாலயம்.
- ராஜ் கொளதமன். (2004). க. அயோத்திதாசர் ஆய்வுகள். சென்னை: காலச்சுவடு பதிப்பகம்.