ரூட்யார்ட் கிப்ளிங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
றூடியார்ட் கிப்லிங் (Joseph Rudyard Kipling டிசம்பர் 30, 1865 - ஜனவரி 18, 1936) இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர், கவிஞர். இவர் தனது 42 ஆவது வயதில் 1907 இல் நோபல் பரிசு பெற்றார். மிகக் குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்றவர் இவரே. மேலும் இப்பரிசு பெற்ற முதல் ஆங்கில மொழி எழுத்தாளரும் இவராவார். சிறுவர்களுக்கான கதைகள், நாவல், கவிதைகள், சிறுகதைகள் என எழுதினாலும் ஒரு கவிஞராகவே அறியப்படுகிறார்.