ஹிந்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஹிந்தி (हिन्दी, हिंदी ) | |
---|---|
பேசப்படும் இடம்: | இந்தியா |
நிலப்பகுதி: | ஆசியா |
பேசுபவர்களின் எண்ணிக்கை: | 480 மில்லியன் தாய்மொழி; 800 மில்லியன் மொத்தம் |
உலக வரிசையில் : | 2 |
மொழிக்குடும்ப வகைப்பாடு: |
இந்தோ-ஐரோப்பியன் இந்தோ-ஈரானியன் |
ஏற்பு நிலை | |
அலுவல் மொழியாக இருக்கும் நாடு: | இந்தியா |
மொழிக் குறியீடு | |
ISO 639-1 | hi |
ISO 639-2 | hin |
SIL | ?? |
ஹிந்தி இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். வடமொழியை அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அரசு ஏற்புப் பெற்ற மொழிகளுள் ஒன்று [1].
பலர் நினைத்துக்கொண்டிருப்பது போல இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல[மேற்கோள் தேவை] , மாறாக இந்தியாவின் அலுவலக மொழிகளில் ஒன்றாகவே அறியப்படுகிறது . பாலிவுட் என்று அழைக்கப்படும் மும்பை படவுலகம் இந்தி உலகம் முழுவதும் பரவ காரணமாக இருக்கிறது. ஆனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பேசப்படும் சமஸ்கிருதம் கலந்த இந்தியைவிட மும்பையில் பேசப்படும் மராத்தி மற்றும் ஆங்கிலத்தின் தாக்கம் அதிகமுள்ள இந்தியே பரவலாக ஊடகங்களால் பரப்பப்படுகிறது .
பொருளடக்கம் |
[தொகு] பேச்சு ஹிந்தி
[தொகு] எண்கள்
- - ஏக் ((தமிழில்) ஒன்று)
- - 'தோ ((தமிழில்) இரண்டு)
- - தீன் ((தமிழில்) மூன்று)
- - சார் ((தமிழில்) நான்கு)
- - பாஞ்ச் ((தமிழில்) ஐந்து)
[தொகு] பொதுவானவை
- கித்னா = பைசா ((தமிழில்) எவ்வளவு?)
- ஊப்பர் = ((தமிழில்) மேலே - பொதுவாக தொடருந்தில் பயணிக்கும் போது ஊப்பர் ஸீட் - மேற்படுக்கை).
- நீச்சே = ((தமிழில்) கீழ் - பொதுவாக தொடருந்தில் பயணிக்கும் போது நீச்சே ஸீட் - கீழ்ப்படுக்கை).
- ஜய்கா? = ((தமிழில்) போகுதா? - எ.கா பூபசண்டா ஜய்க்கா? - பூபசண்டாரா போகுதா?)
- 'கத்தம் ஹோகயா =((தமிழில்) முடிவடைந்து விட்டது).