அண்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அணுவிலும் மிகச்சிறிய துகள்களையும் மிகவும் பெரிய நட்சத்திரங்கள், கோடிக் கணக்கான நட்சத்திரங்களையும் வேறு பொருட்களையும் உள்ளடக்கிய நட்சத்திரக் கூட்டங்கள் போன்ற நம்மைச் சூழவுள்ள அனைத்தையும் உள்ளடக்கியதே அண்டம் ஆகும்.
12 தொடக்கம் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிகமிக அதிகமான அடர்த்தியும், வெப்பநிலையையும் கொண்டிருந்த கோளம் வெடித்துச் சிதறியதன் மூலம் அண்டம் உற்பத்தியானதாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தில் இன்று நாம் பார்வைக்கு எட்டிய அண்டப்பகுதி எல்லாம் சில மில்லிமீட்டர் விட்டத்துக்குள் அடங்கி விட்டிருக்கும் என்று சொல்லப்படுகின்றது.