செங்கிஸ் கான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிங்கிஸ் கான் (1162 அல்லது 1155 – ஆகஸ்டு 18, 1227) மொங்கோலியப் பேரரசைத் தாபித்த மொங்கோலிய அரசராவார். 1206 இல் மொங்கோலிய துர்கிய இனக்குழுக்களை இணைத்து மொங்கோலியப் பேரரசைத் தாபித்தார். இவரது இயற்பெயர் Temüjin Borjigin என்பதாகும். உலக வரலாற்றின் மிகவும் குறிப்பிடத்தக்க இராணுவத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். தனது 72 ஆவது வயதில் மரணமானார். இவரது மரணத்துக்கான காரணம் சரியாக அறியப்படவில்லை.