சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாக் நீரிணைப்பு மற்றும் இராமர் பாலம் பகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்டம். இத்திட்டம் நிறைவேறும்பொழுது கப்பல்கள் இந்தியப் பெருங்கடலிலிருந்து இலங்கையைச் சுற்றாமல் சேதுக் கால்வாய் வழி வங்கக் கடலை அடைய முடியும்.
300 மீ அகலமும் 12 மீ ஆழமும் 167 கி.மீ நீளமும் கொண்டதாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] முக்கிய அம்சங்கள்
- இராமர் பாலம் அருகே 35 கி.மீ நீளத்திற்கும், பாக் நீரிணைப்பு பகுதியில் 54 கி.மீ நீளத்திற்கு மட்டும் அகழ்வுப் பணி மேற்கொள்ளப்படும். போதிய ஆழமுள்ள 78 கி.மீ ஆழப்பப்படுத்தப்படமாட்டாது.
- 10 மீ மிதவை ஆழம் கொண்ட கப்பல்கள் இக்கால்வாய் வழி அனுமதிக்கப்படும்.
- கால்வாயில் செல்லும் கப்பல்கள் 8 கடல் மைல் வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படும்.
- பனாமா கால்வாய் போல குறுமப் பார்வைத் தொலைவு 2.5 கி.மீ.
- 33 மீ அகலமும் 215 மீ நீளமும் 30000டன் கொள்ளளவும் கொண்ட கப்பல்கள் வரை இக்கால்வாயைப் பயன்படுத்தலாம்.
[தொகு] வரலாறு
- 1860- இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஆங்கிலேயரான ஏ.டி.டெய்லரின் சிந்தையில் திட்டம் கருக்கொள்கிறது.
- 1922- துறைமுகப் பொறியாளராக இருந்த சர். ராபர்ட் ப்ரிஸ்ட்டோ திட்டத்தைப் பரிந்துரை செய்கிறார்.
- 1955- ஜவகர்லால் நேரு நியமித்த, இராமசாமி முதலியார் தலைமையிலான "சேது சமுத்திரத் திட்டக் குழு" 998 லட்சம் ரூபாய்க்கான திட்ட மதிப்பீட்டை சமர்ப்பிக்கிறது.
- 1983- இந்திரா காந்தி நியமித்த லெட்சுமி நாராயணன் குழு 282 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கிறது.
- ஜூலை 2, 2005 - திட்டப்பணிகள் மன்மோகன் சிங் அவர்களால் மதுரையில் துவக்கி வைக்கப் படுகிறது.
[தொகு] பயன்கள்
- இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு இடையேயான தூரம் 424 கடல்மைல் தூரம் வரை குறையும்.
- கப்பல்களின் பயண நேரம் 30 மணிநேரம் வரை குறைய வாய்ப்பு.
- கணிசமான எரிபொருள் சேமிப்பு, அந்நியச் செலாவணி சேமிப்பு.
- கப்பல் வாடகைக் கட்டணத்தில் சேமிப்பு.
- கப்பல்கள் அதிக பயணம் மேற்கொள்ள முடியும்.
- இந்தியக் கடற்படையின் திறன் மேம்படும்.
- கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் ஒன்று சரக்குப் பெட்டகப் போக்குவரத்திற்கென ஒருங்கிணைப்புத் துறைமுகமாக மேம்படுத்தப்படும்.
- தூத்துக்குடி துறைமுகமும், தமிழகத்தின் தென்மாவட்டங்களும் வளர்ச்சி பெறும்.
- இராமேஸ்வரத்தில் மீன்பிடித் துறைமுகம் மேம்படுத்தப்படும்.
[தொகு] எதிர்ப்பு
- சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிப் போதிய ஆய்வு நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு.
- அரியவகை கடல் உயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம்.
- ஆழிப்பேரலைகள் உருவாகும் பட்சத்தில் தாக்கம் அதிமாக இருக்கக்கூடும் அபாயம்.
- மீனினங்கள் இடம் பெயரும் அபாயம்.
- மீன்பிடிப்பு பகுதி குறையக்கூடும் என்ற மீனவர்களின் அச்சம்.
- தோண்டப்படும் மணல் அப்புறப்படுத்தப்படுவது பற்றிய ஐயங்கள்.
- ஒரு லட்சம் டன் கொள்ளளவு கொண்ட பெரிய கப்பல்கள் பயன்படுத்த முடியாது என்பதால் பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த பலன் கிட்டுமா என்ற ஐயம்.
- இலங்கையின் கொழும்பு துறைமுகம் பாதிக்கப்படும் என்பதால் இலங்கை அரசு பெரும் கவலை கொண்டுள்ளது.