பாலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாலம் என்பது, வீதிகள், தொடர்வண்டிப்பாதைகள், ஆறுகள், வேறு நீர்நிலைகள் போன்ற தடைகளைக் கடப்பதற்காக கட்டப்படும் அமைப்புகள் ஆகும். பொதுவாகப் பாலங்கள் அவற்றுக்குக் கீழாக வீதி அல்லது நீர்ப் போக்குவரத்துக்களை அநுமதிக்கக் கூடியதாக, தகுந்த உயரத்திலும், உரிய வடிவமைப்பிலும் இருக்கும்.
பொதுவாகப் பாலங்களின் நோக்கம், இடங்களுக்கிடையே தொடர்ச்சியானதும், சீரானதும், இலகுவாகப் பயணம் செயத்தக்கதுமான பாதையொன்றை உருவாக்குவதன் முலம் போக்குவரத்தை இலகுவாக்குவது ஆகும்.
[தொகு] வரலாறு
ஆரம்பகாலப் பாலங்கள் மரக்குற்றியால் ஆனவையாகும். இத்தகைய பாலங்களை இன்றும் கிராமப் பகுதிகளில் காணமுடியும். பொதுவாக ஒரே நீளமான, தென்னை, பனை போன்ற மரங்கள் பயன்படுத்தப்படுவதைக் காணமுடியும். பின்னர் கல்லாலான தூண்களின் மீது கல்லாலான அல்லது மர உத்தரங்களை வைத்துப் பாலம் அமைக்கப்பட்டது. இத்தகைய முறைகள் மூலம் கூடிய தூரங்களைக் கடக்கப் பாலம் அமைக்க முடியாது.
பாலங்களும், நீர்காவிகளும் அமைப்பதற்காக வளைவு (கட்டிடக்கலை) அமைப்புகளை முதன்முதலாகப் பயன்படுத்தியவர்கள் ரோமர் ஆவர். இவர்கள் கட்டிய மேற்படி அமைப்புக்கள் சில இன்றும் நிலைத்திருப்பதைக் காணமுடியும்.