புனிதர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புனிதர் எனப்படுபர் சமய நோக்கில் பாவமற்றவராக கருதப்படுபராவார். இச்சொல் புதிய ஏற்பாட்டில் அனைத்து கிறிஸ்தவரையும் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டாலும் காலப்போக்கில் அது மாற்றம் பெற்று பாவமற்றவரை அல்லது மோட்சம் சென்றதாக கருதப்படுபவர்களையும் மட்டும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக புனிதர் என்பவர் சமுதாயத்தால் நல்ல முன்னுதாரணமாக கணிக்கப்பட்டு, அவரது வாழ்கை ஏனையவரது வாழ்வின் ஈடேற்றத்துக்காக நினவு கூறப்படும். புனிதர் என்றச் சொல் சமய நோக்கில்லாமல் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன.