பெரியசாமி சந்திரசேகரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெரியசாமி சந்திரசேகரன் (பிறப்பு - ஏப்ரல் 16, 1957) இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களது முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரும் தொழிற்சங்கவாதியுமாவார். இவர் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் இலங்கை பாராளுமன்றத்தின் உறுப்பினருமாவார். இவர் தற்போது சமூக வளர்ச்சி மற்றும் சமத்துவ அமைச்சராகப் பதவி வகிக்கிறார். இ.தொ.காவில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சந்திரசேகரன் 1986 இல் அதில் இருந்து விலகி ம.ம.மு.வை ஆரம்பித்தார்.
வடக்கு கிழக்கு தமிழ் போராளி ஒருவருக்கு அதரவு அளித்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட இவர் சிறையில் இருந்தவாரே 1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலின் பிறகு வழக்கு விசாரணையில் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். 1994 இல் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தலைமையிலான அரசில் இணைந்து துணை அமைச்சராக பதவி வகித்தார். 2003 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியிலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் பொதுவாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்கள் உடையவராவார்.