ஏப்ரல் 16
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஏப்ரல் 16 கிரிகோரியன் ஆண்டின் 106ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 107ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 259 நாட்கள் உள்ளன.
<< | ஏப்ரல் 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1853 - இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1885 - இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.
- 1917 - விளாடிமிர் லெனின் தனது அஞ்ஞாதவாசத்தின் பின்னர் பின்லாந்தில் இருந்து ரஷ்யா திரும்பினார்.
- 1946 - சிரியா சுதந்திரம் பெற்றது.
- 1966 - முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.
- 1972 - அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 2007 - ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் இனந்தெரியாதவர்கள் நடாத்திய துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 33 பேர் படுகொலை செய்யப்பட்டு 29 பேர் காயமடைந்தனர்.
[தொகு] பிறப்புகள்
- 1844 - Anatole France, நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1924)
- 1851 - சேர் பொன்னம்பலம் இராமநாதன், இலங்கையின் தேசியத் தலைவர் (இ. 1930)
- 1889 - சார்லி சாப்ளின், நடிகர் (இ. 1977)
- 1927 - பாப்பரசர் பதினாறாம் ஆசீர்வாதப்பர், உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது பாப்பரசர்
- 1935- சுபத்திரன், ஈழத்து முற்போக்கு இலக்கியக் கவிஞர் (இ. 1979)
- 1957 - பெரியசாமி சந்திரசேகரன், இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் அரசியல் தலைவர், தொழிற்சங்கவாதி
[தொகு] இறப்புகள்
- 1908 - அப்புக்குட்டி கிங்ஸ்பரி, யாழ்ப்பாணக் கல்லூரியின் கணிதவியல் பேராசிரியர்.
- 1972 - யசுனாரி கவபட்டா, நோபல் பரிசு பெற்ற யப்பானிய எழுத்தாளர் (பி. 1899)
[தொகு] சிறப்பு நாள்
- சிரியா - விடுதலை நாள்