பொருளாதார அமைப்புக்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பண்டங்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி,பகிர்வு,மற்றும் நுகர்வு போன்றவை ஒர் குறிப்பிட்ட சமூகத்தில் நிர்வகிக்கபடும் விதத்தினை பொருளாதார அமைப்புக்கள்(Economic system) தீர்மானிக்கின்றன.
பொருளாதார அமைப்புக்களானது கிடைப்பருமையான வளங்களின் ஒதுக்கீடு,பாவனை தொடர்பில் மக்களையும் உற்பத்தி நிறுவனங்களையும் இணைக்கின்றது.
ஒவ்வொரு சமூக அமைப்பும், நாடுகளும் சில அடிப்படை பொருளியல் பிரச்சனைகளான எதனை உற்பத்தி செய்தல்?,எவ்வாறு உற்பத்தி செய்தல்?, யாருக்காக உற்பத்தி செய்தல்?, எவ்வளவு உற்பத்தி செய்தல்? போன்றவற்றிக்கு விடையளித்தல் அவசியமாகின்றது. எல்லா சமூகங்களிலும்,நாடுகளிலும் இப்பிரச்சனை பொதுவானது எனினும் அந்தந்த நாடுகள்,சமூகங்களில் இவற்றிக்கு விடையளிப்பதற்காக கடைப்பிடிக்கும் வழிமுறைகள்,சட்டதிட்டங்கள் அதாவது பொருளாதார அமைப்புகள் வேறானவைகள் ஆகும்.
உலகில் பொதுவாக காணப்படுகின்ற பொருளியல் அமைப்புகளாவன: