ரஷ்யா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Российская Федерация Rossiyskaya Federatsiya ரஷ்யக் கூட்டமைப்பு |
|
குறிக்கோள்: எதுவும் இல்லை | |
நாட்டு வணக்கம்: ரஷ்யாவின் தேசிய கீதம் (Hymn of the Russian Federation) | |
தலைநகரம் | மாஸ்கோ |
பெரிய நகரம் | மாஸ்கோ |
ஆட்சி மொழி(கள்) | ரஷ்யன், மற்றும் பல |
அரசு | அரை ஜனாதிபதி முறை |
ஜனாதிபதி பிரதமர் |
விளாடிமிர் புட்டின் மிக்கெயில் பிரட்கோவ் |
விடுதலை - அறிவிக்கப்பட்டது (ரஷ்யா தினம்) - முடிவு செய்யப்பட்டது |
சோவியத் யூனியனிடமிருந்து ஜூன் 12, 1990 டிசம்பர் 26, 1991 |
பரப்பளவு | |
- மொத்தம் | 17,075,200 கி.மீ.² (1 ஆவது) |
? சதுர மைல் | |
- நீர் (%) | 0.5 |
மக்கள்தொகை | |
- 2005 மதிப்பீடு | 143,202,000 (7 ஆவது) |
- 2002 கணிப்பீடு | 145,513,037 |
- அடர்த்தி | 8.4/கிமி² (178 ஆவது) ?/சதுர மைல் |
மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 மதிப்பீடு |
- மொத்தம் | $1.778 டிரில்லியன் (7-9 ஆவது) |
- ஆள்வீதம் | $12,254 (54 ஆவது) |
ம.வ.சு (?) | ? (?) – மத்திம |
நாணயம் | ரூபிள் (RUB ) |
நேர வலயம் | (ஒ.ச.நே.+2 - +12) |
- கோடை (ப.சே.நே.) | (ஒ.ச.நே.+3 - +13) |
இணைய குறி | .ru, .su reserved |
தொலைபேசி | +7 |
மின்சாரம் | |
- மின்னழுத்தம் | ? V |
- அலையெண் | ? Hz |
ரஷ்யா என்பது உலகிலேயே நிலப்பரப்பில் யாவற்றினும் மிகப்பெரிய நாடு. இந்நாட்டின் முழுப்பெயர் ரஷ்யக் கூட்டமைப்பு என்பதாகும். தமிழில் உருசியா என்றும், ருஷ்யா என்றும் குறிக்கப்பட்டுள்ன. தங்கள் மொழியிலும் எழுத்திலும் அவர்கள் Росси́йская Федера́ция என்று அழைக்கிறார்கள். இதன் ஆங்கில ஒலிபெயர்ப்பு: Rossiyskaya Federatsiya அல்லது Rossijskaja Federacija என்பதாகும். தமிழ் ஒலிபெயர்ப்பில்: ருஸ்ஸியக்கய 'வெதராத்சியா. அல்லது சுருக்கமாக ரஷ்யா (ரஷ்ய மொழியில்: Росси́я, ஆங்கில ஒலிபெயர்ப்பு: Rossiya அல்லது Rossija). ஆசியா மற்றும் ஐரோப்பாவில் பெருநிலப்பரப்பில் மிகவிரியும் ஒரு பெரும் நாடாகும் இது. இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 17,075,200 சதுரக் கிலோமீட்டர். பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியலைப் பார்த்தால், ரஷ்யாவின் பரப்பளவு அடுத்த பெரிய நாடான கனடாவின் நிலப்பரப்பைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகமாகும். ரஷ்யா, மக்கள்தொகை அடிப்படையில் உலகில் எட்டாவது இடம் வகிக்கிறது. ஏறத்தாழ 143-145 மில்லியன் மக்கள் (2002ன் கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை 145,513,037) இந்நாட்டில் வாழ்கிறார்கள். ரஷ்யா, பின்வரும் நாடுகளுடன் தன் நில எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது (வடமேற்கிலிருந்து தென்கிழக்கு முகமாக): நார்வே, பின்லாந்து, எஸ்டோனியா, லத்வியா, லித்துவானியா, போலந்து, பெலாரஸ், உக்ரைன், ஜார்ஜியா, அசர்பைஜான், கசகஸ்தான், சீனா, மங்கோலியா மற்றும் வட கொரியா.
[தொகு] மக்கள் பரம்பல்
ரஷ்யாவின் மக்கள் தொகை 143 மில்லியன் ஆகும். பாரிய பரப்பளவு கொண்ட நாடு என்பதால் மக்கள் அடர்த்தி 8.3/கிமீ2 ஆகும். பொதுவாக 78% மக்கள் ஆங்காங்கே இருக்கும் பெரிய நகரங்களிலேயே செறிவாக வாழ்கின்றார்கள் []. ரஷ்யாவின் 80% மக்கள் ரஷ்யா இன மக்கள் ஆவார்கள் []. இவர்களை தவிர பல சிறுபான்மை இன மக்கள் அவர்களுக்குரிய பாரம்பரிய பிரதேசங்களில் வாழ்கின்றார்கள்.