இரத்தம் உறையாமை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இரத்தம் உறையாமை அல்லது குருதி உறையாமை (Haemophilia அல்லது Hemophilia) என்பது, மனித உடலில் இரத்தம் உறையாமல் போகும் பரம்பரை நோயின் பெயராகும். மரபணு குறைபாடுகளின் காரணமாக (அல்லது, மிக அரிதான சமயங்களில், தன் நோய் தடுப்பாற்றல் குறைபாட்டின் (autoimmune disorder) காரணமாக) இரத்தத்தை உறையச் செய்யும் Plasma காரணிகளின் செயல்பாடு குன்றுவதால், இந்நோய் உண்டாகிறது. உடலில், உள் மற்றும் வெளிக் காயங்கள் ஏற்படும் போது இரத்தம் உறையாமல் தொடர்ந்து இரத்த இழப்பு ஏற்படுவதால் உயிர் அபாயம் உள்ள நோய்களில் இதுவும் ஒன்று.
பொருளடக்கம் |
[தொகு] வகைகள்
- ஹீமோஃபீலியா A - factor VIII குறைபாடு , "classic ஹீமோஃபீலியா" (X-linked)
- ஹீமோஃபீலியா B - factor IX குறைபாடு, "Christmas disease" (X-linked)
- ஹீமோஃபீலியா C - factor XI குறைபாடு (Ashkenazi Jews, autosomal recessive)
ஒத்த நோயான வான் வில்லர்பிராண்டு நோய் இம்மூவகை இரத்த உறையாமைகளைவிட வலுக்குன்றியதாகும். வான் வில்லர்பிராண்டு வகை மூன்று மட்டும் ஓரளவு வலுவுடையது. இது இரத்த உறைதலுக்கு காரணமான ஒரு புரதமான வான் வில்லர்பிராண்டு காரணியில் ஏற்படும் மாறுதலால் ஏற்படுகிறது. இரத்த உறைதலில் ஏற்படக்கூடிய சிக்கல்களில் பரவலாகக் காணப்படுவது இது.
[தொகு] நோய் வரும் முறை
[தொகு] சிகிச்சை
இதுவரை இந்நோய்க்கு சிகிச்சை ஏதுமில்லை எனினும், அவசியப்படும் பொழுது (ஹீமோஃபீலியா Aக்கு Factor VIII, ஹீமோஃபீலியா Bக்கு Factor IX) Factor எனப்படும் இரத்தம் உறையச் செய்யும் காரணிகளை ஊசி மூலம் நோயாளியின் உடலில் செலுத்தலாம்.