வரிக்குதிரை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வரிக்குதிரை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது ஒரு தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. இவை உடல் முழுவதும் கருப்பு வெள்ளையிலான வரிகளைக் கொண்டுள்ளன. இதனாலாயே இவை தமிழில் வரிக்குதிரைகள் எனப்படுகின்றன. வரிக்குதிரைகள் மந்தைகளாக (கூட்டமாக) வாழ்கின்றன. நன்கு வளர்ந்த வரிக்குதிரைகள் 1 - 2 மீட்டர் உயரமும் 2 - 3 மீட்டர் நீளமும் கொண்டவை. 250 இல் இருந்து 500 கிலோ எடை வரை இருக்கும். இவற்றால் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓட முடியும். சாதாரணமாக ஒரு நாளில் இவற்றால் 80 கிலோமீட்டர் தொலைவு வரை நடக்க வல்லவை.
[தொகு] வரிகள்
வரிக்குதிரைகளின் வரிகள் தனித்தன்மை பெற்றவை. கருப்பு-வெள்ளை நிறம் கொண்டவை. ஒவ்வொரு வரிக்குதிரையின் வரியும் இன்னொன்றினதைப்போல இருப்பதில்லை. வரிகள் முன்புறம் நெடுக்குக்கோடுகளாகவும் பின்புறமும் கால்களிலும் கிடைக்கோடுகளாகவும் இருக்கின்றன.