இலங்கையின் பொருளாதாரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கைப் பொருளாதாரம் | ||
---|---|---|
பணம் | இலங்கை ரூபாய் (LKR) | |
நிதி ஆண்டு | நாட்காட்டி ஆண்டு | |
வர்த்தக அங்கத்தினர் | SAFTA,WTO | |
Statistics [1] | ||
GDP படிநிலை | 60th (2004ம்படி) [2] | |
GDP | $80.58 பில்லியன்(2004ல்) | |
GDP வளர்ச்சி | 5.2% (2004ல்) | |
GDP தனிமனிதனுக்கு | $4,000 (2004ல்) | |
GDP துறைவாரியாக | விவசாயம் (19.1%), தொழிற்துறை (26.2%), சேவைகள் (54.7%) (2004) | |
பணவீக்கம் | 5.8%(2004) | |
வறுமைக் கோடுகீழானவர்கள் | 22%(1997) | |
ஊழியர் படை | 7.26 மில்லியன்(1996) | |
தொழில் வாரியாக ஊழியர் படை | விவசாயம்(38%), தொழிற்துறை (17%), சேவைகள்(45%)([|1998]]) | |
வேலையின்மைவீதம் | 7.8% (2004) | |
முக்கிய தொழிற்துறை | இறப்பர் , தேயிலை, தென்னை மற்றும் பல விவசாய உற்பத்திபொருட்கள், தொலைத்தொடர்பு, காப்புறுதி, வங்கி, ஆடை, சீமெந்து, பெற்றோலியம் தூய்மையாக்கல், கைத்தறி, புகையிலை | |
வர்த்தகப் பங்காளர்கள் [3] | ||
ஏற்றுமதி | $5.306 பில்லியன் (2004) | |
ஏற்றுமதி பண்டங்கள் | கைத்தறி, ஆடை, தேயிலை, வாசனைத் திரவியங்கள், இரத்தினக்கல், தெங்கு உற்பத்திகள், இறப்பர் உற்பத்திகள், மீன் | |
இறக்குமதி நாடுகள் | ஐக்கிய அமெரிக்கா 31%, ஐக்கிய இராச்சியம் 12.9%, இந்தியா 5.1%, பெல்ஜியம் 4.9%, ஜேர்மனி 4.9%(2004) | |
இறக்குமதி | $7.265 பில்லியன்(2004) | |
இறக்குமதிப் பண்டங்கள் | ஊடுதுணிகள், mineral products, பெற்றோலியம், உணவடுப்புக்கள், இயந்திரங்கள், வாகன ஊதிரிப்பாகங்கள் | |
ஏற்றுமதி நாடுகள் | இந்தியா 14%, சிங்கப்பூர் 8%, சீனா 7.6%, ஹொங்ஹொங் 5.9%, மலேசியா 4.6%, ஜப்பான் 4.6%(2004) | |
பொது நிதிகள் [4] | ||
Public debt | 104.3% of GDP (2004) | |
வருமானம் | $3.34 பில்லியன் (2004) | |
செலவீனம் | $4.686 பில்லியன் (2004) | |
பொருளாதார உதவிகள் | $577 மில்லியன்(பெறுபவர்)(1998) |
புராதன காலந்தொட்டே நவரத்தினங்கள், யானை தந்தம், முத்துகள் போன்ற பொருட்களுக்கு புகழ்பெற்ற இலங்கை, குடியேற்ற காலத்தில் கறுவா, தேயிலை, இறப்பர், தென்னை போன்ற வர்த்தக பயிர்களுக்கு பெயர்பெற்று விளங்கியது. இலங்கைக்கு 1948யில் சுதந்திரம் கிடைத்த பின்னர், முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றிய பொதிலும் அது ஆசியாவிலே மிகமுன்னேற்றகரமான பற்பல சமுகநல நடைவடிக்கையும் மேற்கொண்டது. ஆனால் 1956 ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முழுக்க முழுக்க சமவுடமை பொருளாதாரத்தையே கைக்கொள்ளத்தொடங்கியது. 1977மாம் ஆண்டுக்குப் பின்னர், தனியார்மயப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதுடன், சந்தைப் பொருளாதாரக் கொள்கையையும், ஏற்றுமதிசார்ந்த வர்த்தகத்தையும் நோக்கி நகர்ந்துள்ளது. தற்போது அதி இயங்குநிலையிலுள்ள துறைகளாவன, உணவுப்பொருள் தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, உணவும், குடிவகைகளும், தொலைத் தொடர்பு, காப்புறுதி மற்றும் வங்கித் துறைகளாகும். 1996 அளவில், பெருந்தோட்டப் பயிர்கள் எற்றுமதியில் 20% ஐ மட்டுமே கொண்டிருந்தன (1970 இல் 93%), அதே நேரம் ஆடைகள் ஏற்றுமதியின் 63% ஆக இருந்தது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), 1990களில் சராசரியாக 5.5% ஆண்டு வளர்ச்சியைப் பெற்றது. வறட்சியும், சீர்கெட்டுவந்த பாதுகாப்பு நிலையும், 1996இல் வளர்ச்சியை 3.8% க்குத் தாழ்த்தும் வரை இது நீடித்தது. 1997-2000 காலப்பகுதியில், சராசரி 5.3% வளர்ச்சியோடு கூடிய பொருளாதார மீட்சி காணப்பட்டதெனினும், மின்சாரப் பற்றாக்குறை, வரவுசெலவுப் பிரச்சினைகள், உலகப் பொருளாதார மந்த நிலை, மற்றும் தொடர்ந்து வந்த உள்நாட்டுக் குழப்பங்கள் என்பவற்றால், 2001ல் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ஒரு பொருளாதார ஒடுக்கத்தைக் காண நேர்ந்தது. எனினும் 2001 ல், கையெழுத்து இடப்பட்ட, இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகள் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாகப் பொருளாதாரம் தேறி வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கொழும்பு பங்குச் சந்தை 2003ல் ஆசியாவிலேயே அதி கூடிய வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது. தற்போது, தென்னாசியாவிலுள்ள முக்கிய நாடுகளிடையே அதிக தனி நபர் வருமானத்தைக் கொண்ட நாடு இலங்கையாகும்.