வங்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வங்கி (வைப்பகம்) நிதிக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுகின்ற நிறுவனமாகும்.வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு வைப்புக்களை ஏற்றல்,கடன்களை வழங்கல்,சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமின்றி பல்வேறுபட்ட நிதிச்சேவைகளையும் வழங்குகின்றது.
[தொகு] வங்கியால் வழங்கப்படும் சேவைகள்
வங்கியொன்றால் வழங்கப்படும் சேவைகளானது வங்கி அமைப்பிலும் வங்கி அமைந்துள்ள நாட்டின் தன்மையிலும் முக்கியமாக தங்கியிருக்கும்.ஆயினும் பொதுவாக வங்கியால் வழங்கப்ப்படும் சேவைகளாவன
- வாடிக்கையாளரிடமிருந்து வைப்புக்களை ஏற்று கணக்குகளைப்பேணல்
- கடன்களை வழங்குதல் (loans)
- காசோலையை பணமாக மாற்றல்.வர்த்தக வங்கிகளில் மாத்திரம்
- கடன் அட்டை(credit cards),ATM அட்டைகளை,வங்கிப்பிணை என்பவற்றை வழங்குதல்.
- பாதுகாப்பறை வசதியை செய்து கொடுத்தல்
- நாணய மாற்று செய்து கொடுத்தல்
- சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுதல்.
வங்கிகளின் நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் பல்வேறு வழியினுடாக இடம்பெறும் அவையாவன
- கருமபீடம் அல்லது அலுவலகம் வழியாக நேரடியாக
- ATM
- மின்னஞ்சல்
- தொலைபேசி
- இணையம்
[தொகு] வங்கி அமைப்புக்கள்
- வர்த்தக வங்கி (Commercial bank) - காசோலை வரைவதன் மூலம் தனது வாடிக்கையாளருக்கு தனது கணக்கிலிருந்து பணத்தினை மீளப்பெறும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வங்கிகள் வர்த்தகவங்கியாகும்.இத்தகைய நிதிச்சேவையை ஏனைய வங்கிஅமைப்புகள் மேற்கொள்ளவதில்லை.
- சேமிப்பு வங்கி (Savings bank)
- வியாபார வங்கி (Merchant banks)
- கூட்டுறவு வங்கி (Cooperative Banks)
- அபிவிருத்தி வங்கி
- மூதலீட்டு வங்கி (Investment banks)
- மத்திய வங்கி (Central Bank) - பொருளாதார உறுதி,பொருளாதார அபிவிருத்தி என்பவற்றை நோக்காகக் கொண்டு ஒரு நாட்டின் பணநிரம்பல்,வங்கி முறைமை போன்றவற்றை நெறிப்படுத்தும் கேந்திர நிலையமாகும்.
- இஸ்லாமிய வங்கி (Islamic banks) - இஸ்லாமிய சட்டப்பிரகாரம் இயங்கும் வங்கி அமைப்பாகும்.இங்கு எந்தவொரு வைப்பிற்கும் வட்டி வழங்கப்படமாட்டாது.