ஜப்பான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
日本国 நிப்பொன்-கொகு யப்பான் |
|
நாட்டு வணக்கம்: எம் சக்கரவர்த்தியின் அரசாட்சி பருவம் | |
தலைநகரம் | டோக்கியோ |
பெரிய நகரம் | டோக்கியோ1 |
ஆட்சி மொழி(கள்) | யப்பானிய |
அரசு | அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி |
- மாமன்னர் | அதி மேதகு அகீஈடோ |
- பிரதமர் | சினோசோ அபே |
உருவாக்கம் | |
- நாடு நிறுவப்பட்ட நாள் | பிப்ரவரி 11, கிமு 6602 |
- மேஜி அரசியலமைப்பு | நவம்பர் 29, 1890 |
- தற்போதைய அரசியலமைப்புச் சட்டம் | மே 3, 1947 |
- சன் பிரான்சிசுகோ ஒப்பந்தம் | ஏப்ரல் 28, 1952 |
பரப்பளவு | |
- மொத்தம் | 377,873 கி.மீ.² (62வது) |
145,883 சதுர மைல் | |
- நீர் (%) | 0.8% |
மக்கள்தொகை | |
- 2005 மதிப்பீடு | 128,085,000 (10வது) |
- அடர்த்தி | 337/கிமி² (30வது) 873/சதுர மைல் |
மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 மதிப்பீடு |
- மொத்தம் | $3.911 டிரில்லியன் (3வது) |
- ஆள்வீதம் | $30,615 (16வது) |
ம.வ.சு (2003) | 0.943 (11வது) – உயர் |
நாணயம் | யென் (¥) (JPY ) |
நேர வலயம் | யசீநே (ஒ.ச.நே.+9) |
இணைய குறி | .jp |
தொலைபேசி | +81 |
1 சட்டத்தின் படி டோக்யோ ஒரு நகரமல்ல,யொகொகாமா நகரமே பெரிய நகரமாகும்
2 யப்பான் இந்நாளில் மாமன்னர் ஜிம்முவால் நிறுவப்பட்டது |
ஜப்பான் (யப்பான்) ஆசியக் கண்டத்தில் உள்ள பல தீவுகளாலான நாடாகும். இது பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ளது. இது சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. டோக்கியோ இதன் தலைநகராகும். ஜப்பான் மொத்தம் 6800 தீவுகளை உள்ளடக்கியது. ஹொக்கைடோ, ஹொன்ஃசு, ஃசிகொகு, கியூஃசு ஆகியன ஜப்பானின் முக்கியமான, நான்கு பெரிய தீவுகளாகும்.
[தொகு] நாட்டுப் பெயர்
யப்பானிய மொழியில் ஜப்பான் நாட்டின் பெயர் (日本国), "நிகோன் கொகு அல்லது "நிப்பொன் கொகு" என உச்சரிக்கப் பட்டது. இது சூரியன் எழும் நாடு என்ற பொருளாக சீனாக்கு கிழக்கே இருக்கிற நாடு என்றதும் சூரியன் இருக்கிற மாதிரி வாழ்கின்ற நாடு என்றதும் குறிப்பிடுகிறது. கி. பி. 645ஆம் ஆண்டு நிகோன் (日本) என்ற பெயர் முதலில் யப்பானின் பெயராக பயன்பட்டது ,734 ஆண்டு சட்டப்படி இது யப்பானின் பெயராக நிறுவப்பட்டது.
யப்பானது சட்டதில் வரையறுக்கப்பட்ட ஆங்கிலப் பெயர் ஜப்பான்(Japan) என்பாதாகும். இருந்தபோது அண்மைக்காலமாக நிப்பொன் என்ற பெயரும் அஞ்சல் தலைகளிலும், நாண்யங்களிலும் காணக்கூடியதாக உள்ளது.
ஜப்பான் என்ற ஆங்கில பெயரும், வேறு மொழியின் ஜபொன் (பிரெஞ்சு மொழி), யாபன் ; (ஜெர்மனி மொழி), ஜப்போனெ ; இத்தாலிய மொழி), ஹபொன் (Japón ; ஸ்பெயின் மொழி), இபோனிய (Япония ; ரஷ்யா மொழி), ஈபுன் (ญี๋ปุ่น ; தாய் மொழி) முதலிய பெயர்களும், முன்காலத்தில் சீனாவில் யப்பான் நாட்டுடைய கன் எழுத்துக்களான "日本国" ஆனது "ஜிபங்கு" அல்லது "ஜபங்கு" என்று உச்சரித்த வழக்கத்திலிருந்து தோன்றின என்பது பொதுவான கருத்தாகும். இப்பொழுதும் சில நாடுகளில் யப்பான் நாட்டுடைய கன் எழுத்தை அவ்வவ் நாடுகளின் மொழி வழக்குகேற்ப உச்சரிக்கப்படுகிறது உதாரணமாக, ரீபென் (日本 ; சீனா மொழி), இள்பொன் (일본 ; கொரிய மொழி), நியத்பான் (Nhật Bản ; வியட்னாம் மொழி) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
யமதொ (大和 ; やまと ), "அசிஅரனோ நகட்சு குனி" (葦原中国 ; あしはらのなかつくに ),சின்சூ (神州 ; しんしゅう),ஒன்ச்சோ(本朝 ; ほんちょう) என்ற பெயர்கள் யப்பானிய மொழியில் யப்பான் நாட்டை குறிக்கும் வெவ்வேறு சொற்களாகும். 1889 தொடக்கம் 1946 ஆம் ஆண்டு வரை "தைநிஹொன் தேகொகு" (大日本帝國 ; だいにほんていこく ; மா யப்பான் பேரரசு) என்ற பெயர் யப்பான் நாட்டின் சட்டப்படியான பெயராக இருந்தது.
[தொகு] மாவட்டங்கள்
ஜப்பான் மாவட்டங்கள் "டொ" "டோ" "ஹு" "கென்" என்ற நான்கு விதத்தின் பேரால் அழைக்கப்பட்டுள்ளன. "டொ" எனப்படுகிறது டோக்கியோடொ மட்டும், "டோ" எனப்படுகிறது ஹொக்கைடோ மட்டும், "ஹு" எனப்படுகிறது ஓஸகஹுவும் கியோடொஹுவும், "கென்"எனப்படுகிறது மற்ற 43 மாவட்டங்கள் ஆகும். முக்கியமான தீவுகளும், அங்குள்ளே அல்லது அங்கு பக்கத்திலே இருக்கிற மாவட்டங்களும், கீழே காட்டப்பட்டுள்ள மாதிரி.
【ஹொக்கைடோ 北海道】 |
15.நீகடகென் (新潟県 ; Niigata-ken) 16.டொயமகென் (富山県 ; Toyama-ken) |
மாவட்டங்களுடைய இருப்பிடங்கள், பேர் முன்னே இருக்கிற எண்ணால் காட்டப்பட்டுள்ளன.
[தொகு] வெளியிணைப்புகள்
- பிரதம அமைச்சர் இணையத் தளம் (ஆங்கிலமும் ஜப்பான்மொழியும்)
- Japan - A Huge Directory of Japan in English
- http://web-japan.org/index.html
ஜி8 |
---|
கனடா | பிரான்ஸ் | ஜெர்மனி | இத்தாலி | ஜப்பான் | ரஷ்யா | ஐ.இ | ஐ.அ.மா |