ஒலிப்பியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மொழியியல் |
கோட்பாட்டு மொழியியல் |
ஒலிப்பியல் |
ஒலியியல் |
உருபனியல் |
சொற்றொடரியல் |
சொற்பொருளியல் |
Lexical semantics |
மொழிநடை |
விதிமுறை |
சூழ்பொருளியல் |
பயன்பாட்டு மொழியியல் |
சமூக மொழியியல் |
அறிதிற மொழியியல் |
வரலாற்று மொழியியல் |
சொற்பிறப்பியல் |
ஒலிப்பியல் என்பது பேச்சு ஒலிகள் (குரல்) பற்றிய ஆய்வு ஆகும். ஒலி முறைமைகள் மற்றும் ஒலியன்கள் எனப்படும் மொழியியல் அலகு மட்டத்தில் இயங்கும் ஒலியியல் போலன்றி, ஒலிப்பியல், ஒலிகளின் உண்மையான இயல்புகளையும் அவற்றின் உற்பத்தியையும் கருத்திற் கொள்கின்றது. பொருள் பற்றிய ஆய்வு (சொற்பொருளியல்) மொழியியல் பகுத்தாய்வின் இந்த மட்டத்தில் வருவதில்லை.
ஒலிப்பியல் ஆய்வின் கருப்பொருட்களான ஒலிகள் (Phones), மனிதர்களினால் உச்சரிக்கப்படும் உண்மையான பேச்சொலிகளாகும். எழுத்து மொழிகளும் எழுத்துக்களும் பேச்சின் ஒலிகளோடு நெருங்கிய தொடர்புடையன எனினும், உண்மையில் ஒலிப்பியலாளர்கள் பேச்சொலிகளையே கவனத்தில் எடுக்கிறார்களேயன்றி அவைகளைக் குறிக்கும் குறியீடுகளை அல்ல. எனினும் முன் கூறிய நெருங்கிய தொடர்பு காரணமாக பல அகராதிகள் குறியீடுகள் பற்றிய ஆய்வை (சரியானது குறியியல்) ஒலிப்பியலாய்வின் ஒரு பகுதியாகக் காட்டுகின்றன.
ஒலிப்பியல் மூன்று கிளைகளைக் கொண்டது:
- ஒலிப் பிறப்பியல் (articulatory phonetics), பேச்சை உருவாக்குவதில் உதடுகள், நாக்கு, மற்றும் ஏனைய பேச்சு உறுப்புகளின் அசைவுகள், நிலைகள் என்பன பற்றி ஆய்வு செய்வது;
- அலை ஒலிப்பியல் (acoustic phonetics), ஒலி அலைகளின் இயல்புகள் பற்றி ஆராய்வது; மற்றும்
- கேட்பொலியியல் (auditory phonetics), பேச்சைக் கேட்டுணர்தல் பற்றி ஆய்வு செய்வது.
பல நூறு வேறுபட்ட ஒலிகளை (Phones) அனைத்துலக ஒலிப்பியல் கழகம் (International Phonetic Association)அடையாளம் கண்டு அவற்றை அவர்களுடைய அனைத்துலக ஒலிப்பியல் எழுத்து (International Phonetic Alphabet) முறைமையில் உள்ளடக்கியுள்ளனர்.
மனித குரல்வளையில் உருவாக்கப்படக்கூடிய பேச்சொலிகளுள் வெவ்வேறு மொழிகள் தாங்கள் பயன்படுத்தும் இந்த ஒலிகளின் எண்ணிக்கைகளின் அடிப்படையில் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. மொழிகள் 2 (அப்காஸ்)தொடக்கம் 55 (செடாங்) வரையான உயிரொலிகளையும் 6 (ரொடோகாஸ்) தொடக்கம் 117 (!குங்) வரையான மெய்யொலிகளையும் கொண்டிருக்கக்கூடும்.
ஒரு மொழியிலுள்ள ஒலியன்கள் மிகக் குறைந்த எண்ணிக்கைகளான 10 பிராஹா மொழியிலும், 11 பப்புவா நியூ கினியாவில் பேசப்படும் ரோடோகாஸ் மொழியிலும், 12 ஹவாயன் மொழியிலும், 30 சேர்பிய மொழியிலும் காணப்படும் அதேவேளை தெற்கு ஆபிரிக்காவின் கலஹாரி பாலைவனத்தில் பேசப்படும் !க்சூ மொழியில் 141 உள்ளன. இவை பழக்கமான ஒலிகளான /t/, /s/ or /m/ ஆகியவை தொடக்கம் அசாதாரணமான வழிகளில் உருவாக்கப்படும் மிகவும் வழமைக்கு மாறான ஒலிகள்வரை இருக்கலாம். (பார்க்கவும்: கிளிக் ஒலி, குரல்வளைச் செயல் (phonation), காற்றோட்டப் பொறிமுறை (airstream mechanism)).
ஆங்கில மொழி 13 உயிர் மற்றும் 24 மெய் ஒலியன்களைக் கொண்டது (சில கிளை மொழிகள் பல மாற்றொலிகளைக் (allophone) கொண்டுள்ளன. இது லத்தீன் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட சாதாரன வரைவிலக்கணத்துக்கு மாறுபட்டது. மேற்படி வரைவிலக்கணம் 21 மெய்களையும், 5 உயிர்களையும் கொண்டது (சில சமயம் y உம் w வும் கூட உயிர்களாகக் கருதப்படுவதுண்டு).
ஒலிப்பியல் 2500 ஆண்டுகளுக்கு முன்னமே இந்தியாவில் ஆராயப்பட்டதாகத் தெரிகிறது.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- ஒலிப்பியல் தலைப்புக்களின் பட்டியல்
- Speech processing
- Acoustics
- biometric word list
- பல்கலைக்கழகங்களின் ஒலிப்பியல் பிரிவுகள்
- ஐபிஏ மற்றும் SAMPA.