கலீலியோ கலிலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கலீலியோ கலிலி (பெப்ரவரி 15, 1564 - ஜனவரி 8, 1642), அறிவியற் புரட்சியோடு நெருக்கமான தொடர்புடைய, ஓர் இத்தாலிய வானியலாளரும், தத்துவஞானியும், பௌதீகவியலாளரும் ஆவார். "பௌதீகவியலின் தந்தை" என்றவகையிலும், அறிவியலின் தந்தை என்றவகையிலும், இவர் "நவீன வானியலின் தந்தை" எனக் குறிப்பிடப்படுகின்றார். (கெப்ளர் இப் பட்டத்துக்குக் கூடிய தகுதியுடயவரெனக் கருதப்படுகிறது.) இவருடைய பரிசோதனைகள், அறிவியல்சார்ந்த வழிமுறைகளை நிலைநிறுத்திய பேக்கனின் எழுத்துக்களுக்குத் துணையாக அமைந்ததாகப் பரவலாகக் கருதப்படுகின்றது. கலீலியோ பீசாவில் பிறந்த இவர் கெப்ளரின் சமகாலத்தவராவார். கலீலியோவின் வேலைகள், விசேடமாக அரிஸ்டாட்டிலின் வேலைகளிலிருந்து, குறிப்பிடத்தக்க திருப்பமாகும். கலீலியோ quality யிலும், கணிய அளவுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்.
[தொகு] பரிசோதனை அறிவியல்
கணியஅளவுப் பரிசோதனைகளையும், அவற்றின் முடிவுகளை கணித முறையில் பகுப்பாய்வு செய்வதையும் தொடக்கிவைத்தவர் என்றவகையில், அறிவியற் புரட்சியின் அறிஞர் குழாமில் கலீலியோவுக்கு உயர்ந்த இடம் உண்டு. அக்காலத்திய மேற்கத்தைய சிந்தனையில், இத்தகைய வழிமுறை மரபு கிடையாது. இவருக்கு நேரடியாக முந்திய காலத்தவரான, பெரும் பரிசோதனையாளர், வில்லியம் கில்பர்ட் கணியஅளவு அணுகுமுறைகளைப் பயன்படுத்தவில்லை.