கொழுப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கொழுப்பு (Fat) என்பது அதிக அளவில் உட்கொள்ளப்படும் மூன்று உணவுக் கூறுகளில் ஒன்றாகும். மற்றவை சர்க்கரைச் சத்து மற்றும் புரதம் ஆவன. ஒரு கிராம் சர்க்கரையிலுள்ள நான்கு கிலோ காலரிகளோடு ஒப்பிடுகையில் ஒரு கிராம் கொழுப்பில் சராசரியாக ஒன்பது கிலோ காலரிகள் இருக்கும். இதுவே உணவுப் பொருட்களில் மிகக் கூடுதலாகும்.
உட்கொள்ளும் கொழுப்புகளின் ஒரு பகுதி கைகால்களுக்கருகிலும் வயிற்றுப் பகுதியிலும் தோலுக்கு அடியில் சேமிக்கப்படும். உணவுப் பற்றாக்குறை ஏற்படும் நேரங்களில் இது பயன்படும். மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் இ மற்றும் வைட்டமின் கே போன்றவை கொழுப்பில் கரைந்திருந்தால் மட்டுமே குடலின் உட்சுவர் வழியே குருதி ஓட்டத்தைச் சென்றடைய முடியும். இதன் காரணமாக கொழுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.