யுரேனியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||
பொது | |||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெயர், குறி எழுத்து, தனிம எண் |
யுரேனியம், U, 92 | ||||||||||||||||||||||||||||||||||||||||||
வேதியியல் பொருள் வரிசை |
ஆக்டினைடுகள்
வார்ப்புரு:Elementbox periodblock வார்ப்புரு:Elementbox appearance |
||||||||||||||||||||||||||||||||||||||||||
அணு திணிவு | 238.02891(3) g/mol | ||||||||||||||||||||||||||||||||||||||||||
எதிர்மின்னி அமைப்பு |
[Rn] 5f3 6d1 7s2 | ||||||||||||||||||||||||||||||||||||||||||
சுற்றுப் பாதையிலுள்ள எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) |
2, 8, 18, 32, 21, 9, 2 | ||||||||||||||||||||||||||||||||||||||||||
இயல்பியல் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
இயல் நிலை | திண்மம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அறை வெ.நி அருகில்) | 19.1 கி/செ.மி³ | ||||||||||||||||||||||||||||||||||||||||||
உருகு நிலையில் நீர்மத்தின் அடர்த்தி |
17.3 g/cm³ | ||||||||||||||||||||||||||||||||||||||||||
உருகு வெப்பநிலை |
1405.3 K (1132.2 °C, 2070 °F) |
||||||||||||||||||||||||||||||||||||||||||
கொதி நிலை | 4404 K (4131 °C, 7468 °F) |
||||||||||||||||||||||||||||||||||||||||||
நிலை மாறும் மறை வெப்பம் |
9.14 கி.ஜூ/மோல்(kJ/mol) | ||||||||||||||||||||||||||||||||||||||||||
வளிமமாகும் வெப்ப ஆற்றல் |
417.1 கி.ஜூ/மோல் kJ/mol | ||||||||||||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை |
(25 °C) 27.665 ஜூ/(மோல்·K) J/(mol·K) | ||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | orthorhombic | ||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆக்ஸைடு நிலைகள் |
3+,4+,5+,6+[1] (weakly basic oxide) |
||||||||||||||||||||||||||||||||||||||||||
Electronegativity | 1.38 (Pauling scale)
வார்ப்புரு:Elementbox ionizationenergies2 |
||||||||||||||||||||||||||||||||||||||||||
அணு ஆரம் | 175 pm | ||||||||||||||||||||||||||||||||||||||||||
வான் டெர் வால் ஆரம் |
186 பி.மீ (pm) | ||||||||||||||||||||||||||||||||||||||||||
வேறு பல பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
காந்த வகை | paramagnetic
வார்ப்புரு:Elementbox eresist ohmmat0 |
||||||||||||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கடத்துமை |
(300 K) 27.5 வாட்/(மீ·கெ) W/(m·K) |
||||||||||||||||||||||||||||||||||||||||||
வெப்ப நீட்சி | (25 °C) 13.9 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K) | ||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒலியின் விரைவு (மெல்லிய கம்பி வடிவில்) |
(20 °C) 3155 மீ/நொடி | ||||||||||||||||||||||||||||||||||||||||||
Young's modulus | 208 GPa | ||||||||||||||||||||||||||||||||||||||||||
Shear modulus | 111 GPa | ||||||||||||||||||||||||||||||||||||||||||
Bulk modulus | 100 GPa | ||||||||||||||||||||||||||||||||||||||||||
Poisson ratio | 0.23 | ||||||||||||||||||||||||||||||||||||||||||
CAS பதிவெண் | 7440-61-1 | ||||||||||||||||||||||||||||||||||||||||||
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||
மேற்கோள்கள் |
யுரேனியம் என்னும் தனிமம் பளபளப்பான வெளிறிய சாம்பல் நிறத்தில் திண்ம நிலையில் இருக்கும் ஒரு பொருள். இதன் அணுவெண் 92. இதன் வேதியியல் குறியெழுத்து U ஆகும். இதுவே இயற்கையில் கிடைக்கும் அதிக அணுநிறை கொண்ட தனிமம். இதன் அணுநிறை வெள்ளீயத்தை விட ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகம். இது தனிமங்களின் அட்டவனையில் ஆக்ட்டினைடுகள் வரிசையைச் சேர்ந்த ஒரு தனிமம். யுரேனியம் சிறிதளவு கதிரியக்க இயல்பு கொண்ட தனிமம். இத் தனிமம் நில உருண்டையில், மண்ணிலும் பாறைகளிலும், நீரிலும் மிகமிகச் சிறிதளவே கிடைக்கின்றது. பெரும்பாலும் யுரேனைட்டு போன்ற கனிமப்படிவுகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றது. கிடைக்கும் அளவு மில்லியனுக்கு ஒரு சில என்னும் சிற்றளவிலேயே கிடைக்கின்றது.
இயற்கையில் கிடைக்கும் யுரேனியம் அணுக்கள் பெரும்பாலும் யுரேனியம்-238 (99.275%), மற்றும் யுரேனியம்-235 (0.72%) என்னும் வகைகளாகவும், மிக மிகச் சிறிதளவு (0.0058%) யுரேனியம்-234 என்னும் வகையாகவும் உள்ளன. யுரேனியம் மிக மெதுவாக ஆல்ஃவாத் துகள்களை உமிழ்கின்றது. யுரேனியம்-238 இன் அரைவாழ்வுக் காலம் 4.5 பில்லியன் ஆண்டுகளாகும். யுரேனியம்-235 இன் அரைவாழ்வுக் காலம் 700 மில்லியன் ஆண்டுகளாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு நில உலகத்தில் ஒரு பொருளின் தின்மையை அறிய யுரேனிய-தோரிய தொன்மையறி முறை என ஒரு முறை நிறுவப்பட்டுள்ளது. யுரேனியமானது தோரியம், பொலோனியம் ஆகிய இரண்டுடன் சேர்ந்து உள்ள மூன்று அணுச் சிதைவு கொள்ளும் பொருட்கலுள் ஒன்றாகும். இவ்வாறு அணுச்சிதைவு கொள்ளும்பொழுது ஏராளமான வெப்பம் உண்டாவதால் அணு உலைகள் இயக்கி அணுகுண்டு முதலிய அணு ஆயுதங்கள் செய்ய உதவுகின்றது. குறைந்த அளவு யுரேனியம்-235 என்னும் ஓரிடத்தான் கொண்ட யுரேனியத்தை (யுரேனியம்-238), குறைவுற்ற யுரேனியம் என்று கூறுவர். இந்த குறைவுற்ற யுரேனியமும் மிகவும் அடர்த்தியான பொருளாகையால் (வெள்ளீயத்தை விட 70% அதிகம், அடர்த்தி = 19050 கிலோ.கி /மீ3 (kg/m³) ), இதனைக் கொண்டு, வலுவான தடித்த மாழைகளால் (உலோகங்களால்) ஆன சுவர்களையும் பிளக்கமுடியும்.[2] . எனவே போர்க்கருவிகளில் இது மிகவும் பயன்படுகின்றது. இதனால் மாந்தர்களுக்கு பல உடல்நலக் கேடுகளும் விளளயும்.
யுரேனியம் கண்ணாடிகளில் நிறமூட்டியாகவும் பயன்படுகின்றது. மஞ்சள் கலந்த சிவப்பு, எலுமிச்சை நிற மஞ்சள் போன்ற நிறங்கள் தரவல்லது.