இரத்தச் சிவப்பணு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இரத்தச் சிவப்பணு முதுகெலும்புடைய விலங்குகளின் இரத்தத்தில் உள்ள அணுக்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனவாகும். இவையே இவ்விலங்குகளில் பிராண வாயுவை நுரையீரலிலிருந்து திசுக்களுக்கு எடுத்துச் செல்கின்றன. பிற்பாடு, திசுக்களிலிருந்து வெளியிடப்படும் கரி அமில வாயுவையும் நுரையீரலுக்கு எடுத்துச் செல்கின்றன. இப்பணியில் உதவுவது இவற்றிலுள்ள ஹீமோகுளோபின் என்ற புரதமாகும்.