சமன்பாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சமன்பாடு (equation) அல்லது ஈடுகோள் என்பது கணிதத்தில் ஒரு முறையாக உருவாக்கிய அல்லது தொகுத்த ஒன்றானது வேறு முறையாக ஆக்கிய அல்லது தொகுத்த வேறொன்றுக்கு முற்றிலும் ஈடாக உள்ளது என்பதைக் கூறும் கணிதக் கூற்று ஆகும். இதனை இரு சிறு கிடைக்கோடு ( = ) இட்டுக் காட்டுவர். காட்டாக 2 + 3 = 5 என்பது ஒரு சமன்பாடு. இதனை 2 கூட்டல் 3 ஈடு 5 என்று படிக்கலாம், அல்லது 2 கூட்டல் 3 சமம் 5 என்று படிக்கலாம். அதே போல 2 + 4 = 3 x 2 என்பதும் ஒரு சமன்பாடு. ம = 6 என்றால் ம3 = 216 என்பனவும் சமன்பாடுகள் (ஈடுகோள்கள்).