உத்தரப் பிரதேசம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உத்தரப் பிரதேசம் | |
![]() உத்தரப் பிரதேசம் அமைந்த இடம் |
|
தலைநகரம் | லக்னௌ |
மிகப்பெரிய நகரம் | கான்பூர் |
ஆட்சி மொழி | ஹிந்தி, உருது |
ஆளுனர் முதலமைச்சர் |
டி. வி. ராஜேஸ்வர் முலாயம் சிங் யாதவ் |
ஆக்கப்பட்ட நாள் | 2 பிப்ரவரி 1950 |
பரப்பளவு | 238,566 கி.மீ² (4வது) |
மக்கள் தொகை (2001) அடர்த்தி |
166,052,859 (1வது) 314.42/கி.மீ² |
மாவட்டங்கள் | 70 |
இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்று உத்தரப் பிரதேசம் (Uttar Pradesh). இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் இதுவே. லக்னௌ இம்மாநிலத்தின் தலைநகராகும். அலகாபாத், கான்பூர், வாரணாசி, ஆக்ரா ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள். ஹிந்தி, உருது ஆகியவை இம்மாநிலத்தில் பெரும்பான்மையாக பேசப்படும் மொழிகள்.
பொருளடக்கம் |
[தொகு] புவியமைப்பு
இந்தியாவின் வட பகுதியில் அமைந்த மாநிலமான உத்தரப் பிரதேசம், இந்தியாவில் அதிக பரப்பளவு கொண்ட மாநிலங்களில் ஐந்தாம் இடம் வகிக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள் உத்தராஞ்சல், இமாசலப் பிரதேசம், ஹரியானா, தில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், மற்றும் பீகார் ஆகியவை. உத்திரப் பிரதேசத்தின் வடக்கில் நேபாள நாடு அமைந்துள்ளது. கங்கை, யமுனை ஆகிய பெரு நதிகள் உத்தரப் பிரதேசத்தின் வழியாக ஓடுவதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது. 2000ஆம் ஆண்டு உத்தராஞ்சல் மாநிலம் உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
[தொகு] மாவட்டங்களும் ஆட்சிப் பிரிவுகளும்
உத்தரப் பிரதேசம் 70 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 70 மாவட்டங்கள் 17 ஆட்சிப் பிரிவுகளுள் அடங்கும். இப்பிரிவுகள் பின்வருவன.
- ஆக்ரா
- அஸம்கர்
- அலகாபாத்
- கான்பூர்
- கோராக்பூர்
- சித்ரகூட்
- ஜான்சி
- தேவிபதான்
- பைஸாபாத்
- பரைச்
- பரேலி
- பஸ்தி
- மிர்ஸாபூர்
- மொராதாபாத்
- மீரட்
- லக்னௌ
- வாரணாசி
- சஹரன்பூர்
[தொகு] அரசியல்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ்.
[தொகு] வெளி இணைப்புகள்
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | ![]() |
---|---|
அருணாசலப் பிரதேசம் | அஸ்ஸாம் | ஆந்திரப் பிரதேசம் | இமாசலப் பிரதேசம் | உத்தரப் பிரதேசம் | உத்தராஞ்சல் | ஒரிசா | கர்நாடகம் | குஜராத் | கேரளம் | கோவா | சத்தீஸ்கர் | சிக்கிம் | தமிழ் நாடு | திரிபுரா | நாகாலாந்து | பஞ்சாப் | பீகார் | மகாராஷ்டிரம் | மணிப்பூர் | மத்தியப் பிரதேசம் | மிசோரம் | மேகாலயா | மேற்கு வங்காளம் | ராஜஸ்தான் | ஹரியானா | ஜம்மு காஷ்மீர் | ஜார்க்கண்ட் | |
யூனியன் பிரதேசங்கள்: அந்தமான் நிக்கோபார் தீவுகள் | சண்டீகர் | தமன் தியூ | தாத்ரா மற்றும் நகர் ஹவேலி | பாண்டிச்சேரி | லட்சத்தீவுகள் | |
தேசிய தலைநகரப் பகுதி: தில்லி |