ஆந்திரப் பிரதேசம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆந்திரப் பிரதேசம் | |
ஆந்திரப் பிரதேசம் அமைந்த இடம் |
|
தலைநகரம் | ஹைதராபாத் |
மிகப்பெரிய நகரம் | ஹைதராபாத் |
ஆட்சி மொழி | {{{ஆட்சி மொழி}}} |
ஆளுனர் முதலமைச்சர் |
சுசில்குமார் சிண்டே வை. எஸ். ராஜசேகர ரெட்டி |
ஆக்கப்பட்ட நாள் | 1 அக்டோபர் 1953 |
பரப்பளவு | 2,75,068 கி.மீ² (4வது) |
மக்கள் தொகை ([[{{{கணக்கெடுப்பு ஆண்டு}}}]]) அடர்த்தி |
7,57,27,000 (4வது) 275/கி.மீ² |
மாவட்டங்கள் | 23 |
ஆந்திரப் பிரதேசம் இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று. இதன் தலைநகரம் ஹைதராபாத் ஆகும். விஜயவாடா, விசாகப்பட்டிணம் ஆகியன இம்மாநிலத்திலுள்ள ஏனைய பெரிய நகரங்களாகும். இங்குள்ள பெரும்பாலான மக்கள் பேசும் மொழி தெலுங்கு.
பொருளடக்கம் |
[தொகு] புவியமைப்பு
ஆந்திரப் பிரதேசத்தின் வடக்கில் மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், ஒரிசா ஆகிய மாநிலங்களும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் தமிழ் நாடும், மேற்கில் கர்நாடகமும் அமைந்துள்ளன. தென் மாநிலங்களில் மிகப்பெரிய மாநிலமான ஆந்திரப் பிரதேசம், இந்தியாவின் ஐந்தாவது பெரிய மாநிலமாகும். கோதாவரி, கிருஷ்ணா ஆகிய நதிகள் ஆந்திரப் பிரதேசம் வழியாகப் பாய்கின்றன.
[தொகு] மாவட்டங்கள்
- அதிலாபாத்
- அனந்தபூர்
- சித்தூர்
- கடப்பா
- கிழக்கு கோதாவரி
- மேற்கு கோதாவரி
- குண்டூர்
- ஹைதராபாத்
- கரீம்நகர்
- கம்மம்
- கிருஷ்ணா
- கர்னூல்
- மகபூப்நகர்
- மேதக்
- நல்கொண்டா
- நெல்லூர்
- நிஜாமாபாத்
- பிரகாசம்
- ரங்காரெட்டி
- ஸ்ரீகாகுளம்
- விசாகப்பட்டிணம்
- விஜயநகரம்
- வாரங்கல்
[தொகு] பொருளாதாரம்
விவசாயமே ஆந்திரப் பிரதேசத்தில் அதிகமாக பழக்கத்திலுள்ள தொழிலாகும். அரிசி, புகையிலை, பருத்தி, மிளகாய், கரும்பு ஆகியவை இங்கு விளைவிக்கப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்திற்கு ஆந்திரப் பிரதேசத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
[தொகு] கலாசாரம்
தெலுங்கு ஆந்திரப் பிரதேசத்தின் முக்கிய மொழியும், அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். கர்நாடக சங்கீதத்தில் தெலுங்கு மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. தெலுங்கு ஆண்டுப்பிறப்பான உகாதி, ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுகிறது. குச்சிப்புடி, ஆந்திரத்தின் பாரம்பரிய நாட்டிய வகையாகும்.
ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட தெலுங்கு திரைப்படத் துறை, இந்தியாவில் மூன்றாம் பெரிய திரைப்படத்துறையாகும்.
ஆந்திர உணவு வகைகள் காரம் நிறைந்தவை.
[தொகு] வெளி இணைப்புகள்
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | |
---|---|
அருணாசலப் பிரதேசம் | அஸ்ஸாம் | ஆந்திரப் பிரதேசம் | இமாசலப் பிரதேசம் | உத்தரப் பிரதேசம் | உத்தராஞ்சல் | ஒரிசா | கர்நாடகம் | குஜராத் | கேரளம் | கோவா | சத்தீஸ்கர் | சிக்கிம் | தமிழ் நாடு | திரிபுரா | நாகாலாந்து | பஞ்சாப் | பீகார் | மகாராஷ்டிரம் | மணிப்பூர் | மத்தியப் பிரதேசம் | மிசோரம் | மேகாலயா | மேற்கு வங்காளம் | ராஜஸ்தான் | ஹரியானா | ஜம்மு காஷ்மீர் | ஜார்க்கண்ட் | |
யூனியன் பிரதேசங்கள்: அந்தமான் நிக்கோபார் தீவுகள் | சண்டீகர் | தமன் தியூ | தாத்ரா மற்றும் நகர் ஹவேலி | பாண்டிச்சேரி | லட்சத்தீவுகள் | |
தேசிய தலைநகரப் பகுதி: தில்லி |