கிரியேட்டிவ் காமன்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிரியேட்டிவ் காமன்ஸ் (Creative Commons) என்பது, ஆக்கப்பணிகளை சட்டப்படி மற்றவரோடு பகிர்ந்துகொள்ளலை ஊக்குவிப்பதையும் விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு இயங்கும் இலாபநோக்கற்ற அமையமாகும். இது 2001 இல் லோறன்ஸ் லெஸிக் என்பவரால் உருவாக்கப்பட்டது.
இவ்வமையமானது இதற்கென பல்வேறு வகையான காப்புரிமை உரிம ஒப்பந்தங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இவ்வுரிம ஒப்பந்தங்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள் என அறியப்படுகின்றன.
இவ்வுரிமங்களில் சில ஆக்கப்பணிகளின் ஒருசில உரிமைகளை காக்கின்றன. சில கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள் ஆக்கப்பணிகளின் எந்த உரிமையையும் மூடி (முடக்கி) வைப்பதில்லை.
பொருளடக்கம் |
[தொகு] கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள்
பல்வேறு தேவைகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் வெவ்வேறு வகையான ஆறு உரிம ஒப்பந்தங்களை கிரியேட்டிவ் காமன்ஸ் தயாரித்து வழங்கியிருக்கிறது. அவ்வாறு உரிமங்களும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள் என அழைக்கப்படுகிறது.
பார்க்க: தனிக்கட்டுரை, கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள்
[தொகு] கிரியேட்டிவ் கொமென்ஸ் மீதான எதிர்நிலை விமர்சனங்கள்
கிரியேட்டிவ் கொமென்ஸ் அமைப்பும் அதன் உரிம ஒப்பந்தங்களும் பல்வேறு தரப்பினரால் எதிர்நிலையாக விமர்சிக்கப்படுகின்றன. கட்டற்ற மென்பொருள் அமையத்தின் உருவாக்குனரும், கட்டற்ற புலமைச்சொத்து தொடர்பான தத்துவம், இயங்குகை ஆகிவற்றுக்காக நன்று அறியப்பட்டவருமான ரிச்சர்ட் ஸ்டால்மன், ஒரு அமைப்பு என்ற ரீதியில் தான் கிரியேட்டிவ் கொமன்ஸ் இற்கு இனியும் ஆதரவளிக்கப்போவதில்லை என்ற பொருள்பட கருத்து வெளியிட்டுள்ளார்.
கிரியேட்டிவ் கொமென்ஸ் மீதான குற்றச்சாட்டுக்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
[தொகு] அடிப்படை அறம்சார் நிலைப்பாடு இல்லாமை
[தொகு] அடிப்படை அரசியல்சார் நிலைப்பாடு இல்லாமை
[தொகு] காப்புரிமைக்கு எதிராக இயங்குகிறது என்ற குற்றச்சாட்டு
[தொகு] வெளி இணைப்புக்கள்
- கிரியேட்டிவ் காமன்ஸ் வலைமனை (ஆங்கிலத்தில்)