பார்முலா 1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பார்முலா 1 (Formula 1 or F1) ஆண்டு தோறும் நடைபெறும் கார் மோட்டர் பந்தயத் தொடராகும். இப்பந்தயங்கள் ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக நடைபெற்றாலும் தற்போது உலகின் மற்ற பகுதிகளிலும் பிரபலமாகிக் கொண்டு வருகிறது. FIA (Fédération Internationale de l'Automobile) எனப்படும் அமைப்பால் நடத்தப்பட்டு வருகிறது. வருடந்தோரும் சுமார் 11 அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியின் சார்பாகவும் இரண்டு ஓட்டுனர்கள் பங்கு கொள்வர். ஒவ்வொரு போட்டியிலும் ஒட்டுனர் பெறும் இடத்தைப் பொறுத்து அவருக்கு புள்ளிகள் வழங்கப்படும். தொடர் இறுதியில் அதிக புள்ளிகள் பெறும் ஓட்டுனருக்கு ஓட்டுனர் சாம்பியன்ஷிப் பட்டம் வழங்கப்படும். 2004ஆம் ஆண்டின் ஓட்டுனர் பட்டத்தை மைக்கேல் சூமாக்கர் தட்டிச் சென்றார். 2005ல் ஃபெர்னாண்டோ அலோன்ஸோ மற்றும் கிமி ரைக்கோனென் ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.