ஹாரி பாட்டர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஹாரி பாட்டர் | |
---|---|
நூல் பெயர் | ஹாரி பாட்டர் அன்ட் த ஸ்சோஸரஸ் ஸ்டோன் |
நூல் ஆசிரியர் | ஜே. கே. ரௌலிங் |
வகை | சிறுவர் இலக்கியம் |
பொருள் | |
காலம் | 1997 |
இடம் | ஐக்கிய இராச்சியம் (பதிப்பகம்) |
மொழி | ஆங்கிலம் |
பதிப்பகம் | புளூம்ஸ்பரி |
பதிப்பு | 1997 |
பக்கங்கள் | |
ஆக்க அனுமதி | |
ISBN சுட்டெண் | {{{சுட்டெண்}}} |
பிற குறிப்புகள் |
ஹரி பொட்டர் (தமிழக வழக்கு - ஹாரி பாட்டர்) பரவலாக அறியப்படும் சிறுவர் நாவலாகும். இது ஜே. கே. ரௌலிங் என்ற பிருத்தானிய பெண் எழுத்தாளரால் எழுதப்பட்டது. இப்புத்தகங்களில் சில திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. இக்கதையை மையமாக வைத்து கணினி விளையாட்டுக்களும் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
1997 ல் ரெளலிங் ஹரி போட்டர் தொடரில் முதலாவது புத்தகத்தை வெளியிட்டார். இது வணிக நோக்கில் பெருமளவு வெற்றி பெற்றது. இது வரை வெளி வந்த ஆறு புத்தகங்களின் 300 மில்லியன் படிகள் (பிரதிகள்) உலகளாவிய வெளியில் விற்றுத் தீர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் இது வரை இந்தப் புத்தகம் 63 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
கதையின் பெரும் பகுதி ஹாக்வாட்ஸ் எனும் மந்திர தந்திரங்களைக் கற்பிற்கும் பாடசாலையிலேயே இடம் பெறுகின்றது. அத்துடன் கதையின் நாயகனுக்கும் கொடிய மந்திரவாதியான வால்டமோட் என்பவருக்கும் இடையிலான சண்டையையே பெருமளவு கதை சுற்றி இருக்கின்றது.
இந்தத் தொடரில் மொத்தம் ஏழு புத்தகங்கள் வெளி வரும் என்று கூறப்பட்டது. தற்போது ஆறு புத்தகங்கள் வெளி வந்துள்ளன. ஏழாவது புத்தகமான ஹரி போட்டர் அன்ட் த டெத்லி ஹலோவ்ஸ் என்ற புத்தம் ஜூலை 21, 2007 ல் வெளி வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக வெளி வந்த புத்தமாக ஹரி போட்டர் அன்ட் த ஹாஃப் பிளட் பிரிஸ் எனும் கதை 16 ஜூலை 2005 ல் வெளி வந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.
இந்தப் புத்தகங்களின் வெற்றியைத் தொடர்ந்து எழுத்தாளர் இலக்கிய வரலாற்றில் ரௌலிங் அவர்கள் பெரும் பணக்கார எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்தப் புத்தகங்களை ஐக்கிய இராச்சியத்தில் புளூம்பரி நிறுவனமும் அமேரிக்காவில் ஸ்கொலாஸட்டிக் பிரஸ்சும், கனடாவில் ரெயின் கோஸட் புக்ஸ் மற்றும் அவுஸ்திரேலியாவில் அலன் & அன்வின் நிறுவனமும் வெளியிட்டுள்ளன.
இந்தப் புத்தகங்கள் வெற்றிகரமாக வெர்னர் பிரதர்ஸ் நிறுவனத்தால் திரைப்படமாக்கப்பட்டு வருகின்றது. இதுவரை வெளி வந்த புத்தகங்களில் நான்கு புத்தகங்கள் திரைப்படமாக வெளி வந்துள்ளன. அத்துடன் ஐந்தாவது புத்தகம் திரைப்படமாக 13 ஜூலை 2007 அன்று வெளியிடப்பட உள்ளது.
[தொகு] கதை பிறந்த வரலாறு
1990 ம் ஆண்டில் ஒரு நாள் மக்கள் மிகுந்த தொடரூந்தில் மான்செஸ்டரில் இருந்து லண்டன் நோக்கி எழுத்தாளர் ரெளலிங் அவர்கள் பயனித்துக் கொண்டு இருந்தபோதே இந்தக் கதைக்கான எண்ணம் அவர் மனதில் உதித்தது. இதன் போது அந்தக் கருவை மறந்து விடாமல் இருக்க தன் கைக் குட்டையில் அதை எழுதி வைத்து விடுகின்றார். இது பற்றி ரெளலிங் தனது இணையத் தளத்திலும் கூறியுள்ளார்.
அதே நாள் மாலை நேரம் தனது முதலாவது புத்தகமான ஹரிபொட்டர் அன்ட் த பிலோசபர்ஸஸ் ஸ்டோன் என்ற புத்தகத்திற்கான ஆரம்ப வேலைகளை ஆரம்பிக்கின்றார். அத்துடன் தான் எழுத இருக்கும் ஏழு ஹரி பொட்டர் புத்தகங்களின் பாதையை வகுப்பதுடன் பெருமளவான கற்பனைப் பாத்திரங்களையும், கற்பனை மந்திர உலகையும் ஏற்படுத்திக் கொண்டார்.
[தொகு] வெளி இணைப்புகள்
உத்தியோக பூர்வ தளங்கள்:
- ஜெ. கே ரௌலிங்கின் உத்தியோக பூர்வ வலைத்தளம்
- ஹரிபோட்டர் திரைப்பட உத்தியோக பூர்வ வலைத்தளம் (வேர்னர் பிரதர்ஸ்)
- Bloomsbury.com இல் ஹரிபோட்டர் (சர்வதேச வெளியீட்டாளர்)
- Scholastic.com இல் ஹரிபோட்டர் (அமேரிக்க வெளியீட்டாளர்)
- Raincoast.com இல் ஹரிபோட்டர் (கனேடிய வெளியீட்டாளர்)
ஏனைய மூலங்கள்:
- Muggles' ன் ஹரி போட்டருக்கான வழிகாட்டி
- ஹரி போட்டர் விக்கி
- பிரைவேட் ரைவ் ஹரிபோட்டர் தகவல் தளம்
- Harry Potter பற்றி ஒரு விக்கியா உள்ளது.
- Harry Potter's Universe - Books in Multiple Languages, Audio, Braille and Large Print