Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Web Analytics
Cookie Policy Terms and Conditions இஸ்லாம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

இஸ்லாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இஸ்லாம் Sound الإسلام ("இறைவனிடம் அடைக்கலம்" என்ற பொருளுடைய அரேபிய மொழிச் சொல்) அனைத்து வல்லமைகள் பெற்ற ஒரே இறைவன் மீது நம்பிக்கையை வலியுறுத்தும் சமயங்களுள் ஒன்றாகும். ஆபிரகாமிய சமயக் குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாம் மக்கள் தொகை அடிப்படையில் உலகிலேயே இரண்டாவது பெரிய சமயமாகும். இம்மார்க்கம், கி.பி ஏழாம் நூற்றாண்டில் இன்றைய சவுதி அரேபியாவில் வாழ்ந்த முஹம்மது நபி என்பவரை இறுதி இறைத்தூதராக இறைவனால் தேர்ந்தெடுத்து நிறைவு செய்யப்பட்டது என்று உலகளாவிய முஸ்லிம் மக்கள் கருதுகின்றனர். முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்று அழைக்கின்றனர்.

முஹம்மது நபி மக்காவில் பதிமூன்றாண்டு காலமும், பிறகு மதினாவில் பத்தாண்டு காலமும் வாழ்ந்தபோது, அவர் மூலம் இறைவனால் வழங்கப்பட்ட வேதமும், முஹம்மது நபியின் சொல், செயல், அங்கீகாரமும் இஸ்லாத்தின் வழிகாட்டிகளாக முஸ்லிம்களால் போற்றப்படுகிறது. அவை, முறையே திருக்குர்ஆன் மற்றும் சுன்னா என்றழைக்கப்படுகிறது.

ஜெருசலத்தில் உள்ள முஹம்மது நபி மிஹ்ராஜ் என்னும் விண்ணுலக பயணத்திற்கு புறப்பட்ட இடமென கூறப்படும் பாறை முகடு (Dome of the rock). இதனையொட்டிதான் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமாக கருதப்படும் மஸ்ஜித் அல்அக்ஸா அமைந்துள்ளது.

பொருளடக்கம்

[தொகு] இஸ்லாம் மார்க்க நம்பிக்கைகள்

இஸ்லாத்தை மனித சமூகத்திற்கு எடுத்துரைக்க பல இறைத்தூதர்கள் உலகின் பல பகுதிகளில், பல கால கட்டங்களில், பல மொழிகளில் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் இஸ்லாத்தை முறையே தத்தமது சமுதாயத்தவருக்கு போதித்தார்கள் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும்.

இவ்வருகையின் இறுதியாகவும் உலகத்தார் அனைவருக்கும் அருட்கொடையாகவும் முஹம்மது(ஸல்) அவர்கள் சுமார் கி.பி 610 - ம் ஆண்டு மக்காவில் இறைதூதராக நியமிக்கப்பட்டார்கள்.

இஸ்லாமிய நம்பிக்கையின் படி அனைத்து இறைத்தூதர்களும் அவர்களின் சமுதாயத்தினருக்குப் போதித்த இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை பின்வருமாறு:

"இறைவன் ஒருவனே! அவன் மட்டுமே படைத்தல், காத்தல், போஷித்தல், பரிபக்குவப் படுத்தல், அழித்தல் உள்பட அனைத்து வல்லமைகளும் கொண்டவன். அவனே உங்களையும் நீங்கள் வாழும் பூமியையும் நீங்கள் காணும் கடல், மலை, விண், விண்மீன்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவற்றையும் இன்னும் நீங்கள் காண இயலாத அனைத்தையும் படைத்தவன். வணக்கத்திற்கு தகுதியானவன் அவன் ஒருவன் மட்டுமே. அவனையன்றி வணங்கப்படும் அனைத்தும் அவனது படைப்பினங்களேயன்றி இறைவனல்ல. எனவே ஓரிறைவனான அவனை மட்டுமே வணங்குங்கள்! அவனது வழிகாட்டுதல்கள் இறைத்தூதர்களான எங்கள் மூலம் உங்களை வந்தடைகின்றன. அதனைப் பின்பற்றுங்கள்".

[தொகு] புனிதத் தலங்கள்

சவுதி அரேபியாவிலுள்ள மக்காவில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் காட்சி
சவுதி அரேபியாவிலுள்ள மக்காவில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் காட்சி

மக்காவில் உள்ள மஸ்ஜித் அல் ஹராம், மதீனாவில் உள்ள மஸ்ஜித் அந்நபவி மற்றும் ஜெருசலத்தில் உள்ள மஸ்ஜித் அல்அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளும் இஸ்லாத்தின் முப்பெரும் புனிதத் தலங்களாகக் கருதப்படுகின்றன.

[தொகு] இஸ்லாத்தின் அடிப்படைகள் ஐந்து

இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது நிறுவப்பட்டுள்ளது. அவையாவன:

1. கலிமா: லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ் (வணங்கத்தகுதியானவன் இறைவனைத் தவிர வேறு எதுவுமில்லை. முஹம்மது அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்) என்பதை மனதால் ஏற்று வாயால் மொழிவது. இதை ஈமான் கொள்ளுதல் எனப்படும். 2. தொழுகை: ஒரு நாளைக்கு ஐந்து நேரம் குறிப்பிடப்பட்ட நேரத்தில் தொழுகையை விடாது நிறைவேற்ற வேண்டும். 3. ஜக்காத்: இஸ்லாம் குறிப்பிடும் ஓர் அளவுக்கு மேலுள்ள ஒருவருடைய சொத்திலிருந்து ஏழைவரியாகிய ஜக்காத்தை (பொதுவாக நாற்பதில் ஒரு பங்கு) ஆண்டுதோறும் நிறைவேற்ற வேண்டும். 4. நோன்பு: ஒவ்வொரு வருடமும் ரமதான் மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். உடல் நலமில்லாதவர், வயது முதிர்ந்தோர், குழந்தைகள், அவசிய பயணத்திலிருப்போர் போன்றவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 5.ஹஜ்: உடல் நலமும் பொருள் வசதியும் உள்ளவர்கள் மக்காவில் இருக்கும் கஅபா எனும் ஆலயத்தை வாழ்நாளில் ஒருமுறையேனும் தரிசிக்க புனிதப் பணயம் மேற்கொள்ள வேண்டும்.

ஈமான் என்றால் நம்பிக்கை, ஈமான் கொண்டவன் முஃமின் எனப்படுகிறான். ஒரு முஸ்லிம் பெற்றுள்ள எண்ணிலடங்கா அருட்கொடைகளில் ஈடிணையற்றது அவன் பெற்றுள்ள ஈமான்தான். இவ்வுலக வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்த ஒருவரிடம் ஈமானுடன் அதற்குரிய செயல்பாடுகளும் இருப்பின் நிச்சயமாக அவர் ஈருலகிலும் வெற்றியடைந்து விட்டார். இவ்வுலகில் சகல வசதிகளுடன் வாழும் ஒருவனுக்கு ஈமானும் அதற்குரிய செயல்பாடுகளும் இல்லையெனில் நிச்சயமாக அவன் ஈருலகிலும் தோல்வி அடைந்துவிட்டார் என்பதை பின்வரும் நபிமொழி மூலம் விளங்குகிறது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: லாயிலாஹ இல்லல்லாஹ் என அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை எதிர்பார்த்துக் கூறுபவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கிவிட்டான். (அறிவிப்பவர்: இத்பான்(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

[தொகு] ஈமானின் அடிப்படைகள் ஆறு

முஸ்லிம்களின் நம்பிக்கை ஆறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது.

  1. அல்லாஹ்வை நம்புவது
  2. வானவர்களை நம்புவது
  3. வேதங்களை நம்புவது
  4. நபிமார்களை நம்புவது
  5. மறுமையை நம்புவது
  6. விதியை நம்புவது (நன்மை, தீமைகள் அனைத்தும் அல்லாஹ் நிர்ணயித்தபடியே நடக்கிறது என்று நம்புவது).

(ஆதார நூல்: புகாரி)

[தொகு] ஈமானுக்கும், இஸ்லாத்திற்கும் இடையே உள்ளவேறுபாடு

ஈமான் உள்ளத்தோடு தொடர்புடையது, அதன் அம்சங்களை வெளிப்படையாக அறியமுடியாது எனினும் அதன் பிரதிபலிப்பை உணர முடியும்.

இஸ்லாம் உடலோடும் செயல்களோடும் தொடர்புடையவை, செயலை வைத்து வெளிப்படையாக அறிந்து கொள்ளலாம்.

ஈமான் உள்ளத்துடன் தொடர்புடையது இஸ்லாம் கூறும் கடமை உடலுடன் தொடர்புடையது. ஆக மனதால் கொள்கையை ஏற்று நாவால் மொழிந்து உடலால் செயல்படுபவன் முஸ்லிம் ஆவான்.

வெட்கம் உட்பட ஈமானின் கிளைகள் எழுபதிற்கு மேலாகும். அதில் இறுதியானது துன்பம் தரும் பொருளை பாதையிலிருந்து அகற்றுவது.

சவுதி அரேபியாவிலுள்ள மதினா நகரில் அமைந்துள்ள மஸ்ஜித் அந்நபவி என்னும் புனிதப் பள்ளி. இதனையொட்டி முஹம்மது நபி மற்றும் முதலிரண்டு கலீஃபா அபூபக்கர், உமர் ஆகியோரின் அடக்கவிடம் அமைந்துள்ளது.
சவுதி அரேபியாவிலுள்ள மதினா நகரில் அமைந்துள்ள மஸ்ஜித் அந்நபவி என்னும் புனிதப் பள்ளி. இதனையொட்டி முஹம்மது நபி மற்றும் முதலிரண்டு கலீஃபா அபூபக்கர், உமர் ஆகியோரின் அடக்கவிடம் அமைந்துள்ளது.

[தொகு] வெளி இணைப்புகள்

Static Wikipedia 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu