ஸ்பானிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஸ்பானிய மொழி (Spanish language) ஸ்பெயினிலும் பெருமளவு தென்னமெரிக்க நாடுகளிலும் பேசப்படும் மொழியாகும். லத்தீன் மொழியிலிருந்து உருவான மொழி. குடியிருப்பு வாதக் காலத்தில் அமெரிக்கக் கண்டங்களுக்குப் பரவியது. இது 21 நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழி. ஏறத்தாழ 400 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் வரிசையில் இது நான்காமிடத்தில் இருக்கிறது.