Wikipedia:ஆண்டு நிறைவுகள்/மார்ச்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மார்ச் 1:பொஸ்னியா-எர்செகோவினா, தென் கொரியா: விடுதலை நாள்
- 1901 - இலங்கையில் நான்காவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
- 1910 - தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் தியாகராஜ பாகவதர் (படம்) பிறப்பு.
- 1977 - சார்லி சப்ளினின் உடல் சுவிஸர்லாந்தில் அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.
அண்மைய நாட்கள்: பெப்ரவரி 28 – பெப்ரவரி 27 – பெப்ரவரி 26
- 1823 - தமிழ் நாடு, ஸ்ரீபெரும்புதூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- 1930 - மகாத்மா காந்தி உப்புச் சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார் (படம்).
- 1949 - இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை, கவிக்குயில் சரோஜினி நாயுடு இறப்பு.
அண்மைய நாட்கள்: மார்ச் 1 – பெப்ரவரி 28 – பெப்ரவரி 27
மார்ச் 3: பல்கேரியா - விடுதலை நாள்
- 1892 - யாழ் நூல் எழுதிய சுவாமி விபுலாநந்தர் பிறப்பு.
- 1971 - இந்தியா-பாகிஸ்தான் போர் ஆரம்பம்.
- 1996 - சிரித்திரன் ஆசிரியர் சி. சிவஞானசுந்தரம் (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: மார்ச் 2 – மார்ச் 1 – பெப்ரவரி 28
- 1938 - விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கம் (படம்) பிறப்பு.
- 1977 - ருமேனியா தலைநகர் புகாறெஸ்ட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,570 பேர் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: மார்ச் 3 – மார்ச் 2 – மார்ச் 1
- 1940 - சோவியத் உயர்பீடம் 40,100 போலந்துப் பிரஜைகளுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது.
- 1953 - சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: மார்ச் 4 – மார்ச் 3 – மார்ச் 2
- 1475 - இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியர் மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி (படம்) பிறப்பு
- 1967 - திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
அண்மைய நாட்கள்: மார்ச் 5 – மார்ச் 4 – மார்ச் 3
- கி.மு. 322 - மெய்யியலாளர் அரிஸ்டாட்டில் (படம்) இறப்பு.
- 1944 - ஈழத்து எழுத்தாளர், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை இறப்பு.
- 1990 - கவியோகி சுத்தானந்த பாரதியார் இறப்பு.
அண்மைய நாட்கள்: மார்ச் 6 – மார்ச் 5 – மார்ச் 4
மார்ச் 8: அனைத்துலக பெண்கள் நாள்
- 1906 - பிலிப்பைன்சில் அமெரிக்கத் துருப்புக்களால் ஏறத்தாழ 600 ஏதிலிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1908 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் பிறப்பு.
- 1921 - ஸ்பெயின் பிரதமர் எடுவார்டோ டாட்டோ நாடாளுமன்றை விட்டு வெளியேறும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1922 - சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் இறப்பு.
அண்மைய நாட்கள்: மார்ச் 7 – மார்ச் 6 – மார்ச் 5
- 1934 - விண்வெளி சென்ற முதலாவது மனிதர் யூரி ககாரின் பிறப்பு (படம்).
- 1957 - அலாஸ்காவில் அண்ட்றியானொவ் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலத்த சேதமும் ஆழிப் பேரலையும் ஏற்பட்டது.
- 1976 - இத்தாலியின் டிறெண்டோ என்ற இடத்தில் ஆகாயத்தில் நகர்ந்து கொண்டிருந்த கேபிள் வாகனம் கீழே விழுந்து 15 பிள்ளைகள் உட்பட 42 பேர் கொல்லப்பட்டார்கள்.
அண்மைய நாட்கள்: மார்ச் 8 – மார்ச் 7 – மார்ச் 6
- 1876 - அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்.
- 1911 - இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் மொத்தத் தொகையான 4,092,973 இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.
- 2001 - கணிதவியலாளரும் தமிழ் அபிமானியுமான மாமனிதர் சி. ஜே. எலியேசர் (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: மார்ச் 9 – மார்ச் 8 – மார்ச் 7
மார்ச் 11: சாம்பியா - இளைஞர் நாள்
- 1897 - அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியாவில் எரிவெள்ளி ஒன்று வீழ்ந்து வெடித்ததில் பலத்த சேதம் ஏற்பட்டது.
- 1955 - நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் பிளெமிங் (படம்) இறப்பு.
- 2004 - ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இடம்பெற்ற தொடர் தொடருந்துக் குண்டுவெடிப்பில் 192 பேர் கொல்லப்பட்டனார்.
அண்மைய நாட்கள்: மார்ச் 10 – மார்ச் 9 – மார்ச் 8
மார்ச் 12: மொரீசியஸ் - தேசிய நாள்
- 1930 - மகாத்மா காந்தி பிரித்தானிய ஆட்சியாளரின் உப்பு ஆதிக்கத்துக்கு எதிராக தண்டி யாத்திரை தொடக்கம் (படம்).
- 1993 - மும்பை குண்டுவெடிப்புக்களில் 300 பேர் வரை பலி.
- 2006 - தென்னாபிரிக்கா ஒரு நாள் சர்வதேச ஆட்டமொன்றில் 438/9 ஓட்டங்களைப் பெற்று ஆஸ்திரேலியாவை வென்று சாதனை படைத்தது.
அண்மைய நாட்கள்: மார்ச் 11 – மார்ச் 10 – மார்ச் 9
- 1839 - இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடி ஜாம்ஷெட்ஜி டாடா (படம்) இறப்பு.
- 1975 - ஈழத்தின் தவில் இசைக்கலைஞர் அளவெட்டி தெட்சணாமூர்த்தி இறப்பு.
- 1992 - கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: மார்ச் 12 – மார்ச் 11 – மார்ச் 10
- 1879 - இயற்பியலாளர் அல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறப்பு.
- 1883 - ஜெர்மனிய மெய்யியலாளர் கார்ல் மார்க்ஸ் (படம்) இறப்பு.
- 1898 - டாக்டர் வில்லியம் கப்ரியேல் றொக்வூட், இலங்கையின் அரசியல் நிர்ணய சபைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
அண்மைய நாட்கள்: மார்ச் 13 – மார்ச் 12 – மார்ச் 11
மார்ச் 15: ஜப்பான் - புத்தியிர்ப்பு விழா ஒவுனென் மட்சுறி.
- கி.மு. 44 - யூலியஸ் சீசர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
- 1930 - நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர் அல்ஃவியோரவ் (படம்) பிறப்பு.
- 1991 - ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளிடம் இருந்து ஜெர்மனி முழுமையான விடுதலையை அடைந்தது.
அண்மைய நாட்கள்: மார்ச் 14 – மார்ச் 13 – மார்ச் 12
- 1915 - ஆங்கில இலக்கியத்துறையில் புகழ் பெற்ற இலங்கையர் அழகு சுப்பிரமணியம் பிறப்பு.
- 1953 - கட்டற்ற மென்பொருள் இயக்கம், க்னூ திட்டம் போன்றவற்றின் தோற்றுவிப்பாளர் ரிச்சர்ட் ஸ்டால்மன் (படம்) பிறப்பு.
- 1963 - பாலியில் அகுங்க் மலை நெருப்பு கக்கி 11,000 பேர் வரை பலி.
அண்மைய நாட்கள்: மார்ச் 15 – மார்ச் 14 – மார்ச் 13
- 1919 - றோவ்லட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார்.
- 1959 - 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார்.
- 1996 - இலங்கை அணி ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.
அண்மைய நாட்கள்: மார்ச் 16 – மார்ச் 15 – மார்ச் 14
- 1922 - ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி ஆறு வருட சிறைத்தண்டனை பெற்றார்.
- 1965 - சோவியத் விண்வெளிவீரரான அலெக்ஸி லியோனவ், விண்ணில் நடந்த முதல் மனிதரானார்.
- 1889 - ஆங்கிலம்-தமிழ் அகராதி வெளியிட்ட யாழ் மத்திய கல்லூரி தலைமை ஆசிரியர் வில்லியம் நெவின்ஸ் இறப்பு.
அண்மைய நாட்கள்: மார்ச் 17 – மார்ச் 16 – மார்ச் 15
- 1932 - சிட்னி துறைமுகப் பாலம் (The Sydney Harbour Bridge) திறந்து வைக்கப்பட்டது.
- 1988 - இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.
அண்மைய நாட்கள்: மார்ச் 18 – மார்ச் 17 – மார்ச் 16
- * 1916 - அல்பர்ட் ஐன்ஸ்டீன் (படம்) தனது சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.
- 1953 - ஈழத்தைச் சேர்ந்த நவரத்தினசாமி பாக்கு நீரிணையை நீந்திக் கடந்தார்.
- 2003 - ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டுப் படைகளால் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: மார்ச் 19 – மார்ச் 18 – மார்ச் 17
- 1807 - 202 தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூறும் தமிழ் புளூட்டாக் நூலை எழுதிய ஈழத்தவர் சைமன் காசிச்செட்டி பிறப்பு.
- 1857 - டோக்கியோவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 100,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- 1916 - உலகப் புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை பிஸ்மில்லா கான் (படம்) பிறப்பு.
அண்மைய நாட்கள்: மார்ச் 20 – மார்ச் 19 – மார்ச் 18
மார்ச் 22: உலக நீர் நாள்
- 1952 - இலங்கையின் முதலாவது பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா இறப்பு.
- 1995 - ரஷ்ய விண்வெளி வீரர் வலேரி பல்யாக்கொவ் 438 நாள் விண்ணில் சஞ்சரித்த பின்னர் பூமி திரும்பினார்.
- 2005 - நடிகர் ஜெமினி கணேசன் (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: மார்ச் 21 – மார்ச் 20 – மார்ச் 19
- 1931 - இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1964 - யாழ்ப்பாணத்துச் சித்தர் யோக சுவாமிகள் இறப்பு.
- 1966 - தனது முதல் கரந்தடி தாக்குதலில் சே குவேராவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை சிதறடித்தது.
அண்மைய நாட்கள்: மார்ச் 22 – மார்ச் 21 – மார்ச் 20
மார்ச் 24: அனைத்துலக காச நோய் நாள்
- 1776 - இசை மும்மூர்த்திகளில் ஒருவர் முத்துசுவாமி தீட்சிதர் (படம்) பிறப்பு.
- 1965 - டட்லி சேனநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அண்மைய நாட்கள்: மார்ச் 23 – மார்ச் 22 – மார்ச் 21
- 1655 - சனிக் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரன், டைட்டான் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1957 - ஐரோப்பிய பொருளாதார சமூகம் உருவாக்கப்பட்டது.
- 1995 - முதலாவது விக்கி இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: மார்ச் 24 – மார்ச் 23 – மார்ச் 22
மார்ச் 26: வங்காள தேசம் - விடுதலை நாள்
- 1827 - ஜெர்மனிய மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் லுடுவிக் ஃவான் பேத்தோவன் (படம்) இறப்பு.
- 1871 - இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்.
- 2005 - தமிழீழ தேசிய தொலைக்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்.
அண்மைய நாட்கள்: மார்ச் 25 – மார்ச் 24 – மார்ச் 23
- 1964 - அமெரிக்க சரித்திரத்தில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (9.2 ரிக்டர் அளவு) அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் கொல்லப்பட்டனர்.
- 1968 - விண்வெளிவீரர் யூரி ககாரின் (படம்) இறப்பு.
- 1977 - இரண்டு பயணிகள் விமானங்கள் கனாறி தீவுகளில் மோதிக் கொண்டதில் 583 பலியாகினர்.
அண்மைய நாட்கள்: மார்ச் 26 – மார்ச் 25 – மார்ச் 24
- 1868 - ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி (படம்) பிறப்பு.
- 1979 அமெரிக்காவில் பென்ஸில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது.
- 1988 : ஹலப்ஜா நகரின் குர்திஷ் இன மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதில் சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.
அண்மைய நாட்கள்: மார்ச் 27 – மார்ச் 26 – மார்ச் 25
மார்ச் 29: தாய்வான் - இளைஞர் நாள்
- 1973 - அமெரிக்கத் துருப்புக்கள் தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர்.
- 1790 - 10வது அமெரிக்க ஜனாதிபதி ஜான் டைலர் (படம்) பிறப்பு.
- 2003 - அமெரிக்கா ஈராக்கினுள் புகுந்தது.
அண்மைய நாட்கள்: மார்ச் 28 – மார்ச் 27 – மார்ச் 26
- 1831 - யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமெரிக்க மிஷன் கட்டிடங்கள் தீப்பிடித்து அழிந்தன.
- 1842 - அறுவைசிகிச்சையில் மயக்க மருந்து முதன்முதலாக குறோஃபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.
- 1981 - அதிபர் றொனால்ட் றேகன் வாஷிங்டனில் வைத்து மார்பில் சுடப்பட்டார்
அண்மைய நாட்கள்: மார்ச் 29 – மார்ச் 28 – மார்ச் 27
- 1596 - தத்துவ ஞானி, கணித மேதை ரேனே டெஸ்கார்ட்டஸ் (படம்) பிறப்பு.
- 1931 - நிக்கரகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 1990 - இந்திய அமைதி காக்கும் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.