பாரசீக மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாரசீக மொழி (Persian language) ஈரான், ஆப்கானிஸ்தான், தசகிஸ்தான் போன்ற நாடுகளில் பேசப்படும் மொழி. இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. பிரித்தானியக் காலனித்துவத்திற்கு முன்னர் இந்திய உப கண்டத்தில் இரண்டாம் மொழியாகக் காணப்பட்டது. ஆதலால் இந்தி, சிந்தி, வங்காள மொழி, உருது ஆகிய மொழிகளில் இதன் தாக்கத்தைக் காணலாம்.