Wikipedia:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஏப்ரல் 1: ஏப்ரல் முட்டாள்கள் நாள்
- 1867 - சிங்கப்பூர் பிரித்தானிய காலனித்துவ நாடாகியது.
- 1973 - புலிகளைக் காப்பதற்கான செயற்றிட்டம் (Project Tiger) இந்தியாவில் தொடங்கப்பட்டது.
- 1979 - ஈரான் ஓர் இஸ்லாமியக் குடியரசாகியது.
அண்மைய நாட்கள்: மார்ச் 31 – மார்ச் 30 – மார்ச் 29
ஏப்ரல் 2: உலக சிறுவர் நூல் நாள்
- 1984 - ராகேஷ் சர்மா சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
- 1881 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ. வே. சு. ஐயர் பிறப்பு.
- 2005 - பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் II (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 1 – மார்ச் 31 – மார்ச் 30
- 33 - பகவான் இயேசு கிறிஸ்துவின் (படம்) அமரத்துவம் (இறப்பு)
- 1680 - மராட்டியப் பேரரசன் சிவாஜி இறப்பு.
- 1922 - ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதற் பொதுச் செயலாளரானார்.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 2 – ஏப்ரல் 1 – மார்ச் 31
ஏப்ரல் 4: நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்.
- 1905 - இந்தியாவில் கங்க்ரா அருகில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 370,000 பேர் வரை பலியாயினர்.
- 1968 - அமெரிக்காவின் கறுப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் (படம்) கொலை செய்யப்பட்டார்.
- 1979 - பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் சுல்பிகார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 3 – ஏப்ரல் 2 – ஏப்ரல் 1
- 1957 - இந்தியாவில், பொதுவுடமைவாதிகள் கேரளாவில் ஆட்சியைக் கைப்பற்றினர். ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.
- 1962 - சிங்கள இசைக் கலைஞர், பாடலாசிரியர் ஆனந்த சமரக்கோன் (படம்) இறப்பு.
- 1971 - இலங்கை அரசிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டின் பல பாகங்களில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 4 – ஏப்ரல் 3 – ஏப்ரல் 2
- கிமு 648 - ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது.
- 1965 - ஏர்ளி பேட் (Early Bird) என்ற தொடர்பாடற் செய்மதி விண்ணில் ஏவப்பட்டது.
- 1994 - ருவாண்டா அதிபர் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு இனப்படுகொலைகள் ஆரம்பமானது.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 5 – ஏப்ரல் 4 – ஏப்ரல் 3
- 1920 - சித்தார் கலைஞர் ரவி சங்கர் (படம்) பிறப்பு.
- 1994 - ருவாண்டாவில் டூட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமானது.
- 1978 - யாழ்ப்பாணத்தில் இலங்கையின் காவல் துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை உட்பட பல காவல் துறையினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 6 – ஏப்ரல் 5 – ஏப்ரல் 4
ஏப்ரல் 8: கிறிஸ்தவர்கள் இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்ததைக் குறிக்குமுகமாக உயிர்த்த ஞாயிறு பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
- கிமு 563 - கௌதம புத்தர் (படம்) பிறப்பு.
- 1767 - தாய்லாந்தின் அயுத்தயா வல்லரசு பர்மியரிடம் வீழ்ந்தது.
- 1973 - ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காசோ இறப்பு.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 7 – ஏப்ரல் 6 – ஏப்ரல் 5
- 1967 - முதல் போயிங் 737 பறப்பு.
- 1984 - ஸ்ரீ லங்கா கஜபா றெஜிமென்ட் இராண்வ வண்டி மீது யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 19 படையினர் கொல்லப்பட்டனர்.
- 2003 - ஈராக்கை அமெரிக்கக் கூட்டுப் படையினர் கைப்பற்றினர். சதாமின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 8 – ஏப்ரல் 7 – ஏப்ரல் 6
- 1898 - பகுத்தறிவாளர், உளவியல் வல்லுனர், ஆபிரகாம் கோவூர் (படம்) பிறப்பு.
- 1995 - இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் இறப்பு.
- 2002 - விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கிளிநொச்சியில் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டார்.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 9 – ஏப்ரல் 8 – ஏப்ரல் 7
- 1831 - உருகுவேயில் சல்சிபுதிஸ் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சருவா இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1905 - ஐன்ஸ்டீன் (படம்) தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்..
- 1979 - தான்சானியப் படைகள் உகண்டாவின் தலைநகரான கம்பலாவை ஆக்கிரமித்தன. இடி அமீன் தப்பி ஓட்டம்.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 10 – ஏப்ரல் 9 – ஏப்ரல் 8
- 1945 - ஐக்கிய அமெரிக்காவின் 32 ஆவது அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் இறப்பு.
- 1961 - யூரி ககாரின் (படம்) விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரானார்.
- 2006 - கன்னட நடிகர் ராஜ்குமார் இறப்பு.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 11 – ஏப்ரல் 10 – ஏப்ரல் 9
- 1919 - அம்ரித்சரில் ஜூலியன் வாலாபாக் சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானியத் துருப்புக்கள் சுட்டதில் 379 பேர் உயிரிழந்தனர்.
- 1930 - தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (படம்) பிறப்பு.
- 1930 - மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை தொடங்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 12 – ஏப்ரல் 11 – ஏப்ரல் 10
ஏப்ரல் 14: சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு
- 1865 - அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்டார்.
- 1944 - மும்பாய் துறைமுகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் பலியாயினர்.
- 1950 - தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி ரமண மகரிஷி (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 13 – ஏப்ரல் 12 – ஏப்ரல் 11
- 1452 - இத்தாலிய ஓவியர் லியனார்டோ டா வின்சி பிறப்பு.
- 1865 - ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் (படம்) இறப்பு.
- 1912 - பிரித்தானியாவின் டைட்டானிக் கப்பல் மூழ்கியதில் 1503 பேர் பலியாயினர்.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 14 – ஏப்ரல் 13 – ஏப்ரல் 12
ஏப்ரல் 16: சிரியா - விடுதலை நாள்
- 1851 - இலங்கையின் தேசியத் தலைவர் சேர் பொன்னம்பலம் இராமநாதன் (படம்) பிறப்பு.
- 1853 - இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1966 - முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 15 – ஏப்ரல் 14 – ஏப்ரல் 13
- 1790 - அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் பெஞ்சமின் பிராங்கிளின் இறப்பு.
- 1975 - சுதந்திர இந்தியாவின் 2வது குடியரசுத் தலைவர் எஸ். ராதாகிருஷ்ணன் (படம்) இறப்பு.
- 2004 - இந்தியத் திரைப்பட நடிகை சௌந்தர்யா பெங்களூரில் விமான விபத்தில் இறந்தார்.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 16 – ஏப்ரல் 15 – ஏப்ரல் 14
ஏப்ரல் 18: சிம்பாப்வே - விடுதலை நாள்
- 1906 - அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது.
- 1955 - இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (படம்) இறப்பு.
- 1858 - ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை பிறப்பு.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 17 – ஏப்ரல் 16 – ஏப்ரல் 15
Wikipedia:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 19
Wikipedia:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 20
Wikipedia:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 21
Wikipedia:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 22
Wikipedia:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 23
Wikipedia:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 24
Wikipedia:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 25
Wikipedia:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 26
Wikipedia:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 27
Wikipedia:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 28
Wikipedia:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 29
Wikipedia:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 30