ஜப்பானிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜப்பானிய மொழி | ||
---|---|---|
நாடுகள்: | ஜப்பான், ஹவாய், பிரேசில், ஐக்கிய அமெரிக்க நாடுகள், குவாம், மார்ஷல் தீவுகள், பலவ், தாய்வான் | |
பேசுபவர்கள்: | — | |
நிலை: | 9 | |
மொழிக் குடும்பம்: | தனித்த மொழிகள் ஜப்பானிய மொழி |
|
மொழிக் குறியீடுகள் | ||
ISO 639-1: | ja | |
ISO 639-2: | jpn | |
ISO/FDIS 639-3: | jpn | |
குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ உச்சரிப்பு குறிகள் யுனிகோட் வடிவில் காணப்படலாம். |
ஜப்பானிய மொழி 127 மில்லியன் மக்களால் பேசப்படுகின்ற ஒரு மொழியாகும். இது சிறப்பாக ஜப்பானில் மட்டுமே பேசப்பட்டு வருகின்ற போதும், ஜப்பானிலிருந்து இடம் பெயர்ந்து வேறு நாடுகளில் வசித்து வருபவர்களும் இம்மொழியைப் பேசி வருகின்றனர்.
இம்மொழி ஜப்பானிய சமூக ஏற்ற தாழ்வுகளை குறிப்பதற்கு ஏதுவாக சிக்கலான மரியாதை சொற்களுடன் அமைந்துள்ள ஒட்டுச்சேர்க்கை மொழியாகும். வினைச்சொற்களும் சில குறிப்பிட்ட மொழிக்கூறுகளும், பேசுபவர், கேட்பவர் மற்றும் உரையாடலில் இடம்பெறுபவரின் சமூக உயர்வு நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. ஜப்பானிய மொழியின் மொத்த ஒலிகள் குறைவாக இருப்பினும் தனக்கெ ஒரித்தான வட்டார ஓசை நயத்தைக் (pitch accent) கொண்டுள்ளது. இம்மொழியின் பூர்வீகம் பெரும்பாலும், 8ம் நூற்றாண்டில் பழங்காலத்து ஜப்பானிய மொழியில் இயற்றப்பட்ட மூன்று முக்கிய நூல்தொகுப்புகளால் அறியப்படுகிறது. ஆனால் சிறிய அளவில், இதற்கு முந்தைய காலகட்டங்களிள் இயற்றப்பட்ட செதுக்கள்களும் கிடைத்துள்ளன.