ஐக்கிய நாடுகள் அவை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
![]() ஐக்கிய நாடுகள் கொடி |
|
தலைமையகம் | மேன்ஹட்டன் தீவு, நியூயார்க் நகரம், நியூயார்க், அமெரிக்கா |
உறுப்பினர் | 192 நாடுகள் |
ஆட்சி மொழிகள் | அரபு, மண்டரின், ஆங்கிலம், பிரெஞ்சு, இரசிய மொழி், சுபானிய மொழி |
செயலாளர் நாயகம் | பான் கீன் மூன் |
பாதுகாப்பு குழு | சீனா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, அமெரிக்கா |
அமைப்பு | போர்க்கால கூட்டனியாக: 1 ஜனவரி 1942 அனைத்துலக நிறுவனமாக: 24 அக்டோபர் 1945 |
அதிகாரப்பூர்வ இணையத் தளம் | http://www.un.org/ |
ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது யூஎன், என்பது, நாடுகளைக் கொண்ட ஒரு அனைத்துலக நிறுவனம். கிட்டத்தட்ட எல்லா நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது. எனினும், 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946 ல், இலண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் மத்திய மண்டபத்தில் கூடியது. 1919 இலிருந்து 1946 வரை, இதற்கு முன்னோடியாகக் கொள்ளக்கூடிய, இதையொத்த League of Nations என்னும் நிறுவனம் இருந்து வந்தது. ஐநா அங்கத்தினர் தகுதி, ஐநா சாசனத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்று, அந்நிபந்தனைகளை செயல்படுத்த முடியும் என ஐநாவினால் நம்பத்தகுந்த எல்லா 'சமாதான விரும்பி' நாடுகளுக்கும் உண்டு.. பாதுகாப்புச் சபையின் பரிந்துரைப்படி, பொதுச்சபை அனுமதி பற்றித் தீர்மானம் எடுக்கிறது. செப்டெம்பர் 2003 நிலைவரப்படி, 191 உறுப்புநாடுகள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் பார்க்கவும்.
[தொகு] ஐக்கிய நாடுகள் முறைமை
முதன்மைக் கட்டுரை: ஐக்கிய நாடுகள் முறைமை
ஐக்கிய நாடுகள் முறைமை 5 முக்கிய அமைப்புகளைக் கொண்டது:
- ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
- ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை
- ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை
- ஐக்கிய நாடுகள் நம்பிக்கைப் பொறுப்புச் சபை
- ஐக்கிய நாடுகள் செயலகம்
- அனைத்துலக நீதிமன்றம்
நிறுவன அமைப்புப் பற்றிய மேலதிக தகவல்களுக்குத் தலைமைக் கட்டுரையைப் பார்க்கவும்.
[தொகு] தொடர்பான கட்டுரைகள்
- ஐக்கிய நாடுகள் உறுப்புநாடுகள்
- ஐக்கிய நாடுகள் முறைமை
- அனைத்துலக சமுதாயம்
- ஜப்பானிய அமைதி மணி
- மனிதாபிமானப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள்
- ஐக்கிய அமெரிக்காவும், ஐக்கிய நாடுகளும்
- சீனாவும், ஐக்கிய நாடுகளும்
- பிரகடனங்கள்
[தொகு] வெளியிணைப்புகள்
- United Nations - உத்தியோகபூர்வ வலைத்தளம்