கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மார்ச் 2 கிரிகோரியன் ஆண்டின் 61ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 62ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 304 நாட்கள் உள்ளன.
[தொகு] நிகழ்வுகள்
- 1791 - ஜோன் உவெஸ்லி, மெதடிஸ்தத்தை அறிமுகம் செய்தவர். (பி. 1703)
- 1815 - கண்டி இராச்சியம் பிரித்தானியர் வசமாகியது. மன்னன் ஸ்ரீ விக்கிரமராஜ சிங்கன் (கண்ணுச்சாமி) சிறை பிடிக்கப்பட்டான்.
- 1823 - தமிழ் நாடு, ஸ்ரீபெரும்புதூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- 1930 - மகாத்மா காந்தி உப்புச் சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார்.
- 1946 - ஹோ சி மின் வட வியட்நாமின் அதிபரானார்.
- 1956 - மொராக்கோ பிரான்சிடம் இருந்து சுதந்திரமடைந்ததை அறிவித்தது.
- 1958 - தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
- 1962 - பர்மாவில் இராணுவ ஜெனரல் நெ வின் (Ne Win) இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
- 1991 - இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன தொலைவில் இருந்து இயக்கிய கார் குண்டு ஒன்றின் மூலம் கொலை செய்யப்பட்டார்.
- 1995 - யாஹூ! தொடங்கப்பட்டது.
[தொகு] பிறப்புக்கள்
- 1896 - ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழறிஞர் (இ. 1961)
- 1931 - மிகயில் கொர்பசேவ், சோவியத் ஒன்றிய முன்னாள் அதிபர் (1985 - 1991)
[தொகு] இறப்புக்கள்
- 1930 - டி. எச். லோறன்ஸ், ஆங்கில எழுத்தாளர் (பி. 1885)
- 1949 - சரோஜினி நாயுடு, இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை, கவிக்குயில் (பி. 1879)
[தொகு] சிறப்பு நாள்
[தொகு] வெளி இணைப்புக்கள்